தலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை
கைமுனையில் உள்ள பேனா
போர்முனை கூர் வாளினை
சொல்லால் தலை கவிழ்த்தி
பொருளால் மெய் உணர்த்துமே !
அநீதி கண்டு எதிர்த்து
உண்மை மூடி மறைக்காது
நீதி காத்திடும் மாண்பு
பொய் வேர்களை கருவருக்குமே !
அரசின் தவறை மேற்கோள்காட்டி
மக்கள் வாழ்வுதனை அறிவுறுத்தி
நடுநிலை கோட்டுபாடு தாங்கியே
ஜனநாயகம் போற்றி காத்திடுமே !
பாமரன் மொழியிலே பாட்டேழுதி
அறியாமை அகற்றிட முனைந்து
வறியவர் பிரச்சனை தோலுரித்தே
நியாயம் கிடைக்க போராடுமே !
இயற்கை எழில்தனை உறவாடி
காதல் ரசங்கள் சுவைக்கூட்டி
மொழியின் வழமை செழித்தோங்க
உயிரோடு காவியம் படைக்குமே !
சுதந்திரம் நாட்டில் மடிந்தாலும்
அடுக்குமுறை நேரில் நிகழ்ந்தாலும்
புரட்சிக்கு வித்திடும் பாவலன்
காலத்தால் தோற்றதில்லை சரித்திரமே !
யாருக்கும் அஞ்சாத நெறிகளுடன்
பாட்டெழுதும் பாவலன் கை
அச்சம் அறவே தவிர்த்து
நெஞ்சம் உயர்த்தி வாழ்ந்திடுமே !
ச.மணிகண்டன்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.