புதியவை

(இன்று தந்தையர் தினம்.3.8.1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் காத்தான்குடி பள்ளிவாயலில் புனித இஷாத் தொழுகையிலிருந்த 103 அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள்.அந்த சம்பவத்தில் னது தந்தையும் ஷஹீதானார்.இன்றைய தினத்தில் வாப்பாவை நினைத்து..) தமிழ்மாமணி டீ.எல்ஜவ்பர் கான்(இன்று தந்தையர் தினம்.3.8.1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் காத்தான்குடி பள்ளிவாயலில் புனித இஷாத் தொழுகையிலிருந்த 103 அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள்.அந்த சம்பவத்தில் னது தந்தையும் ஷஹீதானார்.இன்றைய தினத்தில் வாப்பாவை நினைத்து..)
தமிழ்மாமணி  டீ.எல்ஜவ்பர் கான் 

நாற்பத்தேழுவரை என்னை மேய விட்டு விட்டு
நாற்பத்தைந்திலேயே முந்திக்ககொண்டாயே
முஹம்மதை முந்திய அன்சாரிகளாக...
03.08.1990 
உலகத்தின் மூலைகளிலெல்லாம்
ஆச்சர்யம் குந்திய நாள்
இலங்கை தேச வரைபடத்தில்
காத்தான்குடியை தேடிய நாள்...
103 அப்பாவிகளின் உயிரைக்குடித்து
புலிகள் தாகம் தீர்த்தனர்...
எனது உயிருக்கு ஊற்றிய உதிரம்போக
மீதியை அவர்களின்
இனச்சுத்திகரிப்பு தாகம் தீர்த்தாய்..
என் குருதித் துளிகளின் உரிமையாளனே
உன் மரணத்திலும் எனக்கு மகிழ்ச்சிதான்
ஏனெனில் நீ
மௌத்தாகாமல் ஷஹீதானாயே...
என் மனசு கொப்பளிக்கிறது வெப்புசாரத்தை
கவிதை எழுதுகின்றபோதும்
உன் நினைவுக் கண்ணீர்த்துளிகள்
என் காகிதத்தை நனைக்கின்றன..
நீ தொழத்தானே போனாய்
பள்ளிவாயல் எப்படி கர்பலாவாகியது?
உன் உடம்பைச் சுற்றியிருந்த
வெள்ளை ஆடைக்கு யார் சிவப்பு மை ஊற்றியது?
கம்யூனிசத்திற்கு அவர்கள் அடித்த சல்யூட்டா?
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
இந்தப் புனித தினங்களில்
என் பிரார்த்தனைகளுக்கு
அங்கீகாரம் விரிக்கப்படுமென்று..
அப்போது
எங்கள் காசாத்தெருக்களிலெல்லாம்
தினம் தினம் சேவல்கள் கூவும்..
எங்களிடம்
யாசீர்களோ அபூநிதால்களோ இருந்ததில்லை
ஆனால் நாங்களோ தினமும்
பலநூறு கலீல் அல் வஸீர்களையும்
ஜெலான் குர்திகளையும்
ஜனாசாக்களாக தூக்கிக்கொடுத்தோம்..
வாப்பா
நீங்கள் மிகப்பெரிய ஈமானியப் போராளி
உங்கள் மேனியிலிருந்து வழிந்த உதிரத்தால்தான்
கிழக்கு வடக்காகாமல் தப்பியது..
103 தலைகள் உறுண்டிருக்காவிட்டால்
இன்னும் நாங்கள் புத்தளம் தெருக்களிலும்
தற்காலிக கூடாரங்காளிலும் தான்...
என்னை விதைத்தாய்
ஆனால் அறுவடைக்கு இல்லாமல்
ஆக்கி விட்டார்களே..
வலிக்கிறது வாப்பா
நான் முளைக்கும்போதே நீ கருகிப்போனாய்..
என்னை நடக்கப் பழக்கினாய்
ஆனால் நான் மரதன் ஒடினேன்...
பாராட்டுப் பத்திரம்தர நீயில்லையே..
எனக்கு வயது பதினேழு...
இந்தக் கைகள் உன்னை குளிப்பாட்டின..
நீ வீரத்தோடுதான் மரணத்தை முகர்ந்தாய்
உன் முதுகில் அல்ல நெஞ்சில்தான் ரவைகள்...
கால்நூற்றாண்டைக் கடந்தும்
நீ எனக்குள் வாழ்கிறாய்
கபுறுக்குள்ளும்தான்
ஷுஹதாக்கள் உடம்பு தீண்டப்படுவதில்லையே
ஏழாயிரம் ஈமானிய உம்மத்தை
அழித்துப் போட்டார்கள்
அந்த சபிப்பின் பிரதிபலிப்பா
இலக்கை தொட்டும் பார்க்காமல்
அழிந்தும் போனார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.