புதியவை

கல்முனை நீதிமன்றில் 7உணவகங்களுக்கு எதிராக வழக்குகல்முனை நீதிமன்றில் 7உணவகங்களுக்கு எதிராக வழக்கு

கல்முனைப்பிராந்திய மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பேரம்பலம்
கல்முனை நகரில் சுகாதாரமின்றியங்கிய உணவுகையாளும் ஏழு உணவகங்களுக்கெதிராக இன்று 06ஆம் திகதி திங்கட்கிழமை கல்முனை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறதென கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.பேரம்பலம் தெரிவித்தார்.

இவற்றில் மிகமோசமான சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் மூன்று கடைகளை மூடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமென்று எதிர்பார்க்கின்றோம்.
கடந்த சனிக்கிழயைன்று எனது தலைமையிலான திடீர்ப்பரிசோதனைக்குழு கல்முனை நகரிலுள்ள 13 உணவு கையாளும் உணவகங்களுக்குள் பிரவேசித்து பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவற்றில் 07 உணவகங்கள் திருப்தியில்லாமலிருந்தது.

இவ்வாண்டில் இதுவரை 16 உணவகங்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிமன்றின் உத்தரவுடன் சம்மாந்துறையில் 3 உணவகங்களை மூடியுள்ளோம்.
மக்களுக்கு உகந்ததல்லாத உணவுப்பொருட்களை தயாரித்தல் விற்றல் என்பன சட்டப்படி குற்றமாகும்.

கல்முனையிலும் 3 உணவகங்களை மூடும் சாத்தியம் உள்ளது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.