புதியவை

பெண்களைக் கண்டிடும் ஆண் - புஷ்பா கிறிஸ்ரி


பெண்ணென்று  ஒருத்தி மகளாகி
பெண்ணாகி நின்றால் அவளே உன்
பெண் தெய்வமாகி நிற்பாள் நிதமும் 
பெண்ணை மதித்து வாழ்!

தாயை உனக்குத் தந்த இறைவன்
தாயாய் உன்னிடன் வந்தான் என்றே
தாயை மதித்து தானாக நீயும் 
தாயை ஏற்றியே போற்று

மனைவியை என்றும் மதிக்க தெரிந்தவனே 
மனைவியாய் உனக்கு மாறியே வந்தவள்
மனையாளும் நல்ல மனையற தேவதை 
மனையறம் காத்தல் மாண்பு  

மருமகள் வந்த மனையில் வாழும் 
மருமகளின் அருமை மாமனாரே உமக்கு
மருமகளாய் வநத மகாலட்சுமி தரும் 
மருவில்லா வாழ்வு மகிழ்வே

மாமியாரை மதிக்க மறந்த மருமகனே
மாமியில்லாது மகளும் உனக்கேது
மாமியின் மகிமை தெரியாது மருளாதே
மாமியை மதித்து வாழ்க 

ஆண்களே நீங்கள் அணைத்திடும் பெண்கள்
ஆண்டவன் தந்திட்ட  அவதாரம் தானே!
பெண்கள் என்றும் பெற்றவள்  அன்றோ?
பெண்ணை மதிப்பதே பெருமை அன்றோ?

புஷ்பா கிறிஸ்ரி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.