புதியவை

"இறைவாசல்" (மீ.விசுவநாதன்)

                      "இறைவாசல்" (மீ.விசுவநாதன்)
  
                                           

வெள்ளையாய் ஒருநேரம் -கரு

நீலமாய் ஒருநேரம் - மேக

வெள்ளமாய் ஒருநேரம் -செந்

தீயென ஒருநேரம் -இடி

மின்னலாய் ஒருநேரம் - சுடும்

வெய்யிலாய் ஒருநேரம் -ஒளிப்

பின்னலாய் ஒருநேரம் – வான்

பெற்றதே அவதாரம்.


கறுப்பென ஒருநேரம் - நிலாக்

கடலென ஒருநேரம் - புள்

பறக்கிற ஒருநேரம் - தூள்

பறக்கிற ஒருநேரம் - விண்

மீன்களால் ஒருநேரம் - வண்ண

வில்லென ஒருநேரம் - பால்

வான்வெளி அலங்காரம் -இறை

வாசலின் புதுக்கோலம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.