நடராஜன் கல்பட்டு
புதுக் கவிதை என்கிறார் பலர்
ஹைகூ என்கிறார் சிலர்
நானறிந்த தெல்லாம்
பைக்கோ வைகோ தான்
படைத்திட்டேன் பார் நான்
வெண்பா என்கிறார் ஒருவர்
வெண்பாவுக்கு வேண்டுமாம்
இலக்கணச் சுத்தம்
இலக்கணமோ பிலாக்கணமோ
இரண்டுமே நான் அறியேன்
படைத்திட நாட்டுப் பாடல்
பார்த்ததில்லையே நான்
நாட்டுப் புரந்தனையே
வாழ் நாளெந்தன் கழிந்ததே
பட்டணம் ஒன்றில்
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
பட்டெனெத் திறந்திடாதே
சட்டென மூடிடாதே மலரும்
மொட்டென மெல்ல
விரித்திடல் வேண்டும்
கருத்தினைக் கவிஞன்
என்கிறார் கவிதை எழுதும் ஒருவர்
மணம் பரப்பிட வேண்டுமாம் அக்கவிதை
களித்திட வேண்டுமாம் படிப்போர் அதை
கசல் என்கிறார் ஒருவர்
அசல் எது நகல் எது
அறிந்திலேன் நான்
தவிக்கின்றேன் கவிதை எது
எனத் தெரியாது
கான்பூரில் ஒரு கவியரங்கு
இளசுகள் வைத்தனர் தம்
கவிதைகளை அரங்கினிலே
கவிதை யெல்லாம் காதல் பற்றி
சில சரஸம் பல விரஸம்
கைத் தட்டலோ பலம்
அதிருமென விண் ணுலகும்
எழுந்தது ஒரு பெரிசு
கூனி வளைந்த உடல்
வாடிய கத்தரிக் காயென
வரிகள் விழுந்த முகமதனில்
காந்திக் கண்ணடி போல்
ஆதி நாள் கண்ணாடி
ஒரு கையில் தடி
மறு கையில் காகிதத் துண்டொன்று
தட்டுத் தடுமாறி அடைந்தது மேடை தனை
அங்கிருந்தோர் கைதூக்கி மேலேற்றி
அளித்தனர் இருக்கை யொன்றை
அமர்ந்த பெரிசு எழுந்தது மெல்ல மெல்ல
துடைத்தது கண்ணாடியினைக் கைக் குட்டையால்
கனைத்தது தொண்டையினை இரு முறை
அமர்ந்திருதோர் செவி பிளக்க
அடுத்து தன் கவிதை யென
விடுத்தது சில வரிகள்
“தேரா பரஸ்.......... சௌதா பரஸ்.................
பந்த்ரா பரஸ்.......................... சோலா பரஸ்.......................... .....”
நீண்டதோர் இடைவெளி
இப்படியும் அப்படியும்
திரும்பியே பார்த்தது பெரிசு
ஆகா வந்து விட்டது பதினாறு வயது
வரப் போகின்றதோர் அழகிய காதல் கவிதை
என அனைவரும் ஏங்க “ஆதாபரஸ்”,
என்றே சொல்லி அமர்ந்தது பெரிசு தன் இருக்கை தனில்
ஹிந்தி அறியாதோர்க் கென தமிழாக்கம் இதோ
“பதிமூன்று வயது..........பதினான்கு வயது...................
பதினந்து வயது......................பதி னாறு வயது.......................... .....
வணக்கம் உங்களுக்கெ எனது”.
சொல்வீர் பெரியோரே கவிதை எது?
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.