புதியவை

கல்விக்கோர் இமயம். இவ்வுலகை விட்டுப் பிரிந்த து அமரர் அருட் சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல் நாளை மாலை கல்முனையில் நல்லடக்கம்
கல்விக்கோர் இமயம்.  இவ்வுலகை விட்டுப் பிரிந்த து  அமரர் அருட் சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல் நாளை மாலை கல்முனையில் நல்லடக்கம்

இலங்கையில் புகழ்பெற்ற கல்விமானும் சமூகசேவையாளருமாக விளங்கிய ஓய்வுநிலை அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரும் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளருமான றோட்டரியன் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு இன்று திங்கட்கிழமை (06) இறையடி சேர்ந்தார் .
அண்மைக் காலமாக நோய் வாய்ப் பட்டிருந்த அவர் நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது மரணமடைந்தார் . இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும்.

 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஐ .மத்தியு அவர்களின் பூதவுடல் நாளை செவ்வாய்க்கிழமை (07.06.2016) மாலை கல்முனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.

நாளை காலை 8.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் இருந்து நீதிமன்ற வீதி வழியாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு மாணவர்களின் பேண்ட் வாத்திய மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்களின் அஞ்சலி இடம் பெறும் அதன் பின்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட பிரதேச பாடசாலை பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தப் பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு பூதவுடல் கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப் படும் .
மாலை 4.00 மணிக்கு ஆலயத்தில் இருந்து கல்முனை நகர் ஊடாக மரியாதை ஊர்வலமாக பூதவுடல் மயானத்துக்கு எடுத்து செல்லப் பட்டு அடக்கம் செய்யப் படவுள்ளது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.