புதியவை

புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

                         


புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று  இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர்
ஆனாலும் தமது உள்ளத்து உணர்வுகளை அவர்கள் எங்கு இருந்தாலும் இலக்கியத்துக்குள்  பதிக்கின்றனர் 

புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுபவர்கள்

முதலில் சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனை நினைத்துப் பார்க்கின்றனர் 
 தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக்கொண்டவர்கள்.

 தமிழ், சமற்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது

.இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005-ஆம் ஆண்டு தமிழே முதலாவதாகச் செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்ஆகிய நாடுகளில் தமிழ், அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.

ஈழத்தமிழனத்தின் போரட்டத்தின் பின் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களோ பலவிதம் 

புலம் பெயர்ந்த நாட்டில் இயந்திரமயமான வாழ்வோடு அவர்களது தற்கால தமிழ் இலக்கிய போக்குவரவேற்பை பெற்றுக்கொண்டு உள்ளது 

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் அநேகமான ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டு எண்ணிக்கையில் பெரிய அளவில்புலம்பெயர்ந்து சென்றார்கள்.

 தொடக்கத்தில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனேகமாக தாயக நினைவுகளை மீட்பதாகவே இருந்தன. 

தாயகத்தைப் பற்றிய புதினங்களாக இருந்தாலும், புலம் பெயர்ந்தோர் படைப்புக்களாகவே இவை கணிக்கப்பட்டன. 

தொடர்ந்து புகுந்த மண்ணில் பரீட்சயமானபோது வெளிவந்த பல படைப்புக்கள் புகுந்த மண்ணைப் பற்றியதாகவோ அல்லது இரண்டும்கலந்ததாகவோ இருந்தன

. புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்றோ அல்லது புகலிட தமிழ் இலக்கியம் என்றோ இதுவரை காலமும் இவை அழைக்கப்பட்டாலும்,

 அவர்கள் புலம் பெயர்ந்து சுமார் முப்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவர்களின் படைப்புக்கள் தற்கால தமிழ் இலக்கியபோக்கு பற்றி தமிழ் உலகம் கவனித்து வருகின்றது 

 பழைய எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்று அடுத்த தலை முறையினரும் இங்கே எழுதத் தொடங்கிவிட்டார்கள். 

ஆனால் புதிய தலைமுறையினரின் எழுத்துக்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே வெளிவருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலை நீடிக்குமானால் எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து தமிழ் வளர்க்கப்படுமா என்பதுசந்தேகத்திற்குரியதே!

 யாருக்காக எழுதுகின்றோம் என்பது இங்கே முக்கியமானது. 

எழுத்து என்பது எவ்வளவு வாசகர்களைச் சென்றடைகின்றது என்பதைப் பொறுத்தது. 

வாசகர்களில் பலவிதமானவர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரின் ரசனையும் வித்தியாசமானவை. ஆனால் 90 வீதமான வாசகர்கள்மனதிற்கு இதமான மகிழ்வான விறுவிறுப்பான படைப்புக்களையே  விரும்புகின்றார்கள் 

தேவகாந்தன், குரு அரவிந்தன், கே.எஸ்.பாலச்சந்திரன், குறமகள், அ.முத்துலிங்கம், செழியன்,

 வ.ந.கிரிதரன், அகில், மெலிஞ்சி முத்தன், சிவநயனி முகுந்தன், இரா.சம்பந்தன், ரவீந்திரநாதன்,

 பசுந்தீவு கோவிந்தன், மனுவல் ஜேசுதாசன், பொன் குலேந்திரன், தமிழ் நதி, கமலாதேவி 

பெரியதம்பி சரஸ்வதி அரிகிருஸ்ணன் (மலேசியா) விஜயா ராமன் (புதுவை) இவர்களைவிட 

இசைப்பிரியன், வீணைமைந்தன், இரா,தணி, டானியல் ஜீவா, சக்கரவர்த்தி போன்ற

 புலம் பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்குபற்றி பார்க்கும் போது இவர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஓர் வரம் பெற்றவர்கள்  

இவர்களின் நாவல்கள் பெறுமதிமிக்கவை  

கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன்ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

 தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி

(1998), ‘வினாக்காலம்’(1998), ‘அக்னி திரவம்’(2000), ‘உதிர்வின் ஓசை’(2001), ‘ஒரு புதிய காலம்’(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’என்ற நாவலாகத் தந்திருக்கின்றார்.

 இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’  என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது. 

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

 எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவுசார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்

என்று கே. எஸ்.சுதாகர் குறிப்பிட்டிருக்கின்றார்.

 மேலும், ‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன  கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள்.  

மற்றும் ‘மண்ணின் குரல்’ (*நான்கு நாவல்களின் தொகுப்பு),

 ‘அமெரிக்கா’ என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் -  ‘திசை மாறிய தென்றல்’,

 ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் - 

 ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் -  ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர். 

நூல் வடிவத்தில் வெளிவந்த குரு அரவிந்தனின் நாவல்கள் பற்றிப் பதிவுகள் இணையத் தளத்தில் வெளிவந்த  முனைவர் கௌசல்யாசுப்பிரமணியன் அவர்களின் ஆய்வுரையில் இருந்து 
உறங்குமோ காதல் நெஞ்சம்: ‘உறங்குமோ காதல் நெஞ்சம்?’ (2004) என்ற முதல் நாவல் ஈழத்தின் விடுதலைப்போராட்டச் சூழலின்;பின்புலத்திலான சமூக அவலங்களையும் நம்பிக்கைத் துரோகம் விளைவிப்பவர்களின் செயற்பாடுகளையும் கூறுவது. போராட்டச்சூழலில்பாதிப்புற்ற பெண்களின் பிரச்சனைகளையும் மையப்படுத்தி அமைந்த கதையம்சங் கொண்டது இது.

 உன்னருகே நானிருந்தால்:  வடஅமெரிக்க – கனடியச்சூழ்களில் வாழும் ஈழத்தமிழ்ச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பண்பாட்டுப் பிரச்சனைகளைமையப்படுத்தியவையாகும். காதல், குடும்ப உறவுகளில் திருமணம் முடித்தல் என்பன தொடர்பாக எழும் பண்பாட்டுப் பிரச்சினைகள் இவற்றில்கதையம்சங்களாக விரிகின்றன.

தாயுமானவர் (குறுநாவல்) : தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த தமிழ் பத்திரிகையான கலைமகள் நடத்திய அமரர் ராமரத்தினம் நினைவுக்குறுநாவல் போட்டியில் 2 ஆம் பரிசு பெற்ற கதை. ஈழத்துச் சூழலில் இலங்கையில் உள்ள ஈஸ்வரங்களைப் பற்றிய ஆவணமாக அமைந்தஇக்கதை தமிழகத்தில் பலரின் பாராட்டையும் பெற்றிருந்தது. இப்போட்டிக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் திருமதி டாக்டர் லட்சுமி அவர்கள்முதன்மை நடுவராக இருந்தார்.

அம்மாவின் பிள்ளைகள் (குறுநாவல்) : தமிழகத்தில் இருந்து வெளிவரும் யுகமாயினி நடத்திய குறுநாவல் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றகுறுநாவல். போர்ச் சூழலில் புலம் பெயர்ந்த ஒரு தாயின் பரிதாபக் கதை. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திருமபிச்செல்ல முடியாது பரிதவித்து உயிர் துறந்த ஒரு தாயின் பரிதாபக் கதை. இப்போட்டிக்குப் புகழ்பெற்ற தமிழக எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள்முதன்மை நடுவராக இருந்தார்.

சொல்லடி உன் மனம் கல்லோடி (நாவல்) : ஆடற்கலையைக் கருப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம். கனடிய இந்திய கலைஞர்கள்பங்குபற்றித் திரைப்படமாக எடுக்கப்பட்ட இக்கதை குரு அரவிந்தனின் திரைக்கதை வசனத்தில் சிவரஞ்சனி என்ற பெயரில் வெளிவந்து பலரின்பாராட்டையும் பெற்றது. இந்த நாவல் ‘சொல்லடி உன் மனம் கல்லோடீ’ என்ற பெயரில் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.நாவல்கள் படமாக்கப்பட்ட வரிசையில் குரு அரவிந்தனின் சிவரஞ்சனியும் இடம் பெற்றது

என்ன சொல்லப் போகிறாய் (நாவல்) 

: இந்த நாவல் மொன்றியலில் இருந்து வெளிவரும் இருசு பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்களை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

குமுதினி (குறுநாவல்) : குமுதினி என்ற படகில் சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை ஆவணப்படுத்தும் குறுநாவல். கனவுகள்,கற்பனைகளோடு அந்தப் படகில் சென்ற அப்பாவிகளுக்கு என்ன நடந்தது? தமிழர்களாகப் பிறந்ததற்காக அவர்கள் பழிவாங்கப்பட்டார்களா? அந்தஇழப்பிற்கு யார் பதில் சொல்வது? எஸ்.பொ.வின் பெரு முயற்சியால் ஈழத்தமிழரின் குறுநாவல் தொகுப்புக்காக எழுதப்பட்டது.
‘அமெரிக்கா’ என்ற  (வ. ந. கிரிதரன்) சிறு நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிக்கும். 
ஆகஸ்ட் 2001   இதழ்-20 முதல் ஏப்ரல் 2002 இதழ் 28 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான மைக்கலின் நாவல் ‘ஏழாவது சொர்க்கம்’.இந்நாவலும் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட வேண்டியதொரு படைப்பு. 
அடுத்து கடல்புத்திரனின் நாவல்களான ‘வேலிகள்’ மற்றும் ‘வெகுண்ட உள்ளங்கள்’ ஆகிய நாவல்கள் தாயகம் (கனடா) சஞ்சிகையில் தொடராகவெளிவந்தவை. பின்னர் இந்நாவல்களும், சிறுகதைகளும் அடங்கிய தொகுதி ‘வேலிகள்’ என்னும் பெயரில் குமரன் பப்ளீஷர்ஸ் (தமிழ்நாடு)பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. 
கமலாதேவி பெரியதம்பி: தாயார் தந்த தனம் (நாவல் நூலாக வெளிவந்துள்ளது). அ.கந்தசாமி: கவிஞர் ‘கந்தசாமி’ என்றழைக்கப்படுபவர். இவரதுநாவல்கள் செந்தாமரை (பின்னர் மஞ்சரி பத்திரிகைகளில் ‘நான்காவது பரிமாணம்’ ஆகியவற்றில் மிள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.அக்கினித்தாமரை என்றொரு தொடர்கதை
நேரம் கருதி இந்த நாவல்களைப் பற்றிய முழுமையான விபரங்கள் இங்கே தரப்படவில்லை

.புலம் பெயர்ந்த தமிழர்களின் இங்கே உள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் எல்லாம் தகுந்த முறையில் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லைஎன்பதையும் முக்கியமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். 
இனிவரும் காலங்களில் கனடிய தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய முழுமையான, ஆரோக்கியமாக கட்டுரை ஒன்று இலக்கிய ஆர்வலர்களைச்சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல, ஒற்றுமையாகச் செயற்பட்டால் இன்னும் பல சாதனைகளைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையும்எனக்குண்டு.

 புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் இலக்கியத்தில் பங்களிப்பை ஆவணப்படுத்த வேண்டும்
இது இணைய யுகம். நூற்றுக்கணக்கான தமிழ் வலைத்தளங்கள் இன்று இயங்குகின்றன. புலம் பெயர்ந்தவர்களும், சொந்த நாட்டைவிட்டுவெளியேறாதவர்களும் தங்கள் படைப்புகளை இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவர்கள் படைப்புகள் பக்கத்து பக்கத்தில் வெளியாகின்றன. இவைபடிப்பதற்கு உலகத்தின் அத்தனை நாடுகளிலும் கிடைக்கின்றன

விக்கிரம் சேத் இந்தியாவில் பிறந்து ஆங்கிலத்தில் எழுதுகிறார். ரோஹின்ரன் மிஸ்ட்ரி இந்தியாவில் பிறந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து ஆங்கிலமொழியில் படைக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர். கனடாவின் அதி உயர் இலக்கிய பரிசுகளை வென்றவர். அவரை புலம்பெயர்ந்த எழுத்தாளர் என்றுகூறுகிறார்கள். விக்கிரம் சேத்துடைய எழுத்தும் ரோகின்ரன் மிஸ்ட்ரியுடைய எழுத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. விக்கிரம் சேத்தின் புகழுக்கும்குறைவில்லை. இந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட அவருடைய Suitable Boy நாவலுக்கு வேறு யாரும் நினைத்துக்கூடப் பார்த்திராத அளவு இரண்டுலட்சம் பவுண் முன்பணம் கிடைத்தது. ஆனால் ஒருவர் இந்திய எழுத்தாளர் இன்னொருவர் புலம் பெயர்ந்த எழுத்தாளர்.

புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களில் நேர்மையானவர் ஷ்யாம் செல்வதுரை என்று சொல்லலாம். இவர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்துகனடாவில் வாழும் ஆங்கில எழுத்தாளர். பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது ஷ்யாம் செல்வதுரை தான் படைப்பது 'இலங்கைபின்னணியில் எழுதும் கனடிய இலக்கியம்' என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள், அவர்கள் பிறந்த நாட்டில்வாழ்ந்தாலும், புகுந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஆங்கில இலக்கியத்துக்கே செழுமை சேர்க்கிறார்கள். பிறந்த நாட்டு இலக்கியத்துக்கு அவர்களால்ஒரு பங்களிப்பும் இல்லை.

ஐஸக் பஸிவிஸ் சிங்கர் என்பவர் போலந்து யூத எழுத்தாளர். அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகும் அவர் தொடர்ந்து யிட்டிஷ் மொழியில்எழுதினார். ஒரு முறை அவருடைய சிறுகதை ஒன்றை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸோல் பெல்லோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.அவருடைய புகழ் திடீரென்று பரவியது. அதன் பிறகு ஐஸக் பஸிவிஸ் சிங்கர் ஆங்கிலத்தில் படைக்கத் தொடங்கினார். யிட்டிஷ் இலக்கியத்தின்இழப்பு ஆங்கில இலக்கியத்துக்கு வரவாக அமைந்தது.
ங்கூகி வாதியோங்கோ என்பவர் ஆங்கிலத்தில் எழுதும் கென்யா நாட்டு எழுத்தாளர். இவருடைய பிரசித்தி பெற்ற இரண்டு நாவல்களான Weep Not Child, The River Between ஆகியவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவை. இன்று அமெரிக்காவில் வாழும் இவர், ஆங்கிலத்தில் எழுதுவதைநிறுத்திவிட்டு தன் சொந்த மொழியான கிகியூவில் எழுதுகிறார். இவர் சொல்கிறார் ' அடிமைப்படுத்திய ஓர் இனத்தின் மொழியில் நான் எழுதி எப்படிஎன்னை விடுவிக்கமுடியும்? என் மொழியில்தான் நான் எழுதவேண்டும்.' ஆப்பிரிக்க இலக்கியத்தை வளர்க்கவேண்டும் என்பதற்காகலட்சக்கணக்கான வாசகர்களை சம்பாதித்த ஓர் எழுத்தாளர் ஆங்கில மொழியை துறந்து தன் சொந்த மொழிக்கு மாறியது இலக்கிய சரித்திரத்தில்புதுமையான ஒன்று.
 புலம் பெயர் இலக்கியம் என்றால் ஒருவர் புலம் பெயர்ந்து இருந்தால் மட்டும் போதாது. அவர் தன் சொந்த மொழியில் எழுதவேண்டும். புலம் பெயர்சூழலால் அவர் மொழியிலும், சிந்தனையிலும் மாற்றம் இருக்கவேண்டும். இலங்கையில் வாழ்ந்து தமிழில் எழுதிக்கொண்டிருந்த ஒருவரைகனடாவுக்கு அழைத்து வந்து அவரை ஓர் அறையில் பூட்டி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருட முடிவில் அவர் ஒரு நாவல்எழுதி முடிக்கிறார். உடனே அது புலம் பெயர்ந்த இலக்கியம் ஆகிவிடுமா? அவர் இலங்கையில் இருந்தாலும் அதே நாவலைத்தான் எழுதியிருப்பார்.அதேபோல இன்னொருவர் கனடாவில் 40 வருடங்கள் வாழ்ந்து கனடிய பின்னணியில் ஒரு தமிழ் நாவல் எழுதுகிறார். அவருடைய பிறந்தநாட்டைப் பற்றிய பிரக்ஞையோ, இழப்போ, ஏக்கமோ, பிரதிபலிப்போ அதில் இல்லை. பிறந்த நாட்டு வாழ்வு முறைகூட அவருக்கு அந்நியமானது.அவருடைய நாவலை புலம்பெயர்ந்த இலக்கியம் என்று அடையாளப்படுத்த முடியுமா?

1992ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற டெரிக் வால்கொட் என்பவருடைய நோபல் உரை மேற்படி சம்பவத்தை நுட்பமாகஉணர்ந்துகொள்வதற்கு உதவும். 'ஒரு பூஜாடி உடைகிறது. அதன் உடைந்த துண்டுகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி திருப்பி ஒட்டும்போதுகிடைக்கும் காதல் உணர்வு அந்த பூஜாடி பூரணமாக இருந்தபோது கிடைப்பதில்லை.' புலம்பெயர் இலக்கியம் என்று சொல்லும்போது இழந்ததைமீட்கும் அந்தக் காதல் உணர்வு வெளிப்பாடு அங்கே இருக்கவேண்டும்.
இந்தக் காதல் இரண்டு வகையாக வெளிப்படலாம். பிறந்த நாட்டைப் பற்றி எழுதும்போது அந்த இலக்கியம் புகுந்த நாட்டின் கலாச்சார மாற்றத்தால்,புதிய வாழ்வுச் சூழலால், வித்தியாசமான மொழிப்பயிற்சியால் செழுமை பெறவேண்டும். அல்லது புகுந்த நாட்டுப் பின்னணியில் எழுதும்போதுஇழந்த நாட்டின் கலாச்சாரமும் மொழியும் படைப்பில் புது வெளிச்சம் வீசவேண்டும். ஒரு கலாச்சாரம்தான் ஓருவருடைய படைப்பை முழுமைபெறச் செய்கிறது.

எழுத்தாளருக்கு எப்படி வெற்றுத்தாள் எதிரியாகிறதோ, அப்படியே புலம் பெயர்ந்து வாழும் ஒருவருக்கு அவருடைய எழுத்து அடையாளம்பிரச்சினையாகிறது. அவர் படைப்பது புலம்பெயர் இலக்கியமா அல்லது சாதாரண இலக்கியமா என்ற விவாதம் அவர் எழுதி அது கம்புயூட்டரின்நினைவுக்கலனில் சேமிக்கப்படுமுன்னரே ஆரம்பமாகிவிடுகிறது. கவிதை எழுதுபவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் முறைசெயல்படுத்தப்படும்போது புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு அத்தாட்சி முத்திரையும் வழங்கினால் நல்லது. அப்பொழுது அவர்கள் எழுதுவதுபுலம்பெயர் இலக்கியம் என்பது நிச்சயமாகும். அந்த இலக்கியம் செறிவூட்டுவதாகவும் அமையலாம்.
, குறுகிய காலத்தில் முழுமைப் படுத்த  பெறமுடியவில்லை. தவறுதலாக யாருடைய பெயர்களாவது விடுபட்டிருக்கலாம்,

 எனவே அவர்களின் பெயர்களையும் அறியத்தந்தால், கட்டுரையில் இணைத்துக் கொண்டால் இக்கட்டுரை முழுமை பெற்றதாக அமையும். 

இந்த வாசிப்புக்கு எனக்குச் சந்தர்ப்பம் தந்த, மாதாந்த இலக்கியக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்த  தமிழ் சங்கத்தினருக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

எழுத்தாளர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர்களாக இருந்தாலும் அமெரிக்காவிற்குப் பணியின் பொருட்டுப் புமபெயர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் புது இலக்கிய பரப்பும் ஆழமும் இவரை ஒரு அனைத்துலகப் புலம் பெயரிய எழுத்தாளராக (ஆனால் எழுதுவது தமிழில்) அடையாளம் காணத் தூண்டுகிறது. 
அதுபோலவே நாகரத்தினம் கிருஷ்ணாவும் பாண்டிச்சேரி என்ற பிரெஞ்சுநாட்டுக் காலனி ஒன்றின் தமிழ் எழுத்தாளராய் இன்றைய அனைத்துலகப் பரிமாணம் கொண்டு விளங்குகிறார். 
அனைத்துலக இலக்கிய அடையாள அளவுகோலால் அவரை அளக்க வேண்டியதன் தேவையைத் தமிழரங்குக்குக் கொண்டு வருபவராய் தனித்து விளங்குகிறார்.
 இவ்விருவரில் எழுத்துகள் பற்றிய சர்ச்சையோ முக்கியத்துவமோ இன்றைய தமிழிலக்கிய சூழலில் இல்லாதது இவ்விருவரின் எழுத்தின் கோட்பாட்டு அறிவு தமிழிலக்கிய சூழலில் இல்லாததால் என்றும் கூறலாம்.

அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளிற் பிறந்து வளரும் குழந்தைகள், தங்களுக்குப் பரிச்சியமற்ற தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு தூரம் அக்கறைகாட்டுவார்கள் என்பதும் கேள்விக்குரிய விடயமாகும்.
ஆனால், புலம் பெயர்ந்த தமிழரின் படைப்புக்களில் இலங்கைத் தமிழர்கள் அக்கறை காட்டுகிறார்கள். புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்பிலகாணும் பன்முகத் தன்மையை அவர்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கலிங்க நாட்டிலிருந்து, அரசியல் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள், கிழக்கிலங்கையில் தங்கள் கலாச்சார, சமய விழுமியங்களைபாரம்பரியமாகக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுபோல், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் தங்களின் பண்பாட்டுவிழுமியங்களைப் பாதுகாப்பார்கள். ஆனால், எதிர்காலத்தில் தமிழ் மொழி மூலம் இலக்கியம் படைப்பார்களா என்பது கேள்விக்குறியானவிடயமாகும்.

லண்டன் 'காற்றுவெளி' இதழாளர் முல்லை அமுதன் (Mullai Amuthan) அவர்களின் பெரும் முயற்சியில்., உலகம் முழுதுமுள்ள புலம் பெயர்ந்தஎழுத்தாளர்களைப் பற்றிய விவரங்களை புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர்களின் விபரத் திரட்டு..
உலகம் முழுதுமுள்ள புலம் பெயர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி ய விவரங்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், முகவரிகள் மற்றும் மின்னஞ்சல்போன்ற விவரங்களை இந்த புத்தகத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

ச ந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கைவானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கியஉலகிற்கு அறிமுகமானார்.

புலம பெயர் இலக்கியம் ஒரு புதிய பரிமாணத்தைக் கண்டது. தங்களது சுதந்திர சிந்தனைகளை இலக்கியமாகப் படைத்தார்கள். கனடா தொடக்கம்அவுஸ்திரேலியா வரையுமான பெரும்பாகத்தில் தமிழர்களால் நடத்தப்பட்ட கிட்டத்தட்ட 40க்கு மேலான இலக்கியப் பத்திரிகைகளில் ஏராளமானஇளம் எழுத்தாளர்கள் கதைகளையும் கவிதைகளையும் கடடுடரைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதினார்கள்.

புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு சிறுபத்திரிகைகள் மூலம் தளம் கொடுத்த நாடுகளில்முதலடம் வகிப்பது ஜேர்மனியாகும்அங்கு 80ம் ஆண்டின் முற்பகுதியிலிருந்தே பல தரப்பட்ட சிறு பத்திரிகைகளும் வெளியாளின. 1977மு; ஆண்டு கலவரத்தின்பின் கொஞ்சம்கொஞ்சமாக ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்த  இலங்கைத் தமிழ் மக்களுக்கிடையேயுள்ள புத்திஜீவிகளால் பல சிறு பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன.

லண்டன்:
இலங்கையிலிருந்து பத்திரிகையாளராக லண்டனுக்கு புலம் பெயர்ந்த இராஜகோபால், மகாலிங்கசிவம் (மாலி) போன்றேரால் ‘ புதினம்’ பத்திரிகைலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையிலிருந்து பிரிந்து போன மாலி ‘நாழிகை’ என்ற கலை இலக்கிய பத்திரிiயை ஆரம்பித்ததர் 90ம்ஆண்டின் ஆரம்பத்தில் சபேசன் போன்றோரின் ஆர்வத்தால் ‘ பனிமலா’ பத்திரிகை செளிவந்தது.

நோர்வே:
நோர்வே நாட்டிலிருந்து ‘சுவடு’ என்ற பத்திரிகையும்,60ம் ஆண்டின் நடுப் பகுதிகளில் ‘சக்தி’ ‘சுமைகள்’ என்ற சிறு பத்திரிகைகள் வெளிவந்தன. 2005மு; ஆண்டிலிருந்து,தமயந்தி என்பரால்’ உயிர்மை’ என்ற பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஹொலணட்:
சார்ள்ஸ், பத்மமனோகரன் போன்றோரால்’ ஆனா ஆவன்னா. ஏன்ற பத்திரிகை நடத்தப்பட்டது.

டென்மார்க்: ‘சஞ்சீவி’ ‘இனி’ என்ற சிறு பத்திரிகைகள் டென்மார்க் நாட்டில் வாழ்ந்த தமிழ் புத்தி ஜீவிகளால் நடத்தப்பட்டது.

அவுஸ்திரேலியா: டாக்டர் நொயல் நடேசன், முருகபூபதி அவர்களுடன் சர்ந்த பதினைந்து பேர் கொண்ட குழுவுடன் ‘உதயம்’ சிறுபத்திரிகைஆரம்பிக்கப்பட்டது. புலம் பெயாந்த நாடுகளிற் தொடங்கப்பட்ட பல சிறு பத்திரிகைகள் முகம் கொண்ட பல எதிர்ப்புக்களைச் சந்தித்தாலும் ‘ உதயம்பத்திரிகை; இன்னும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இப்படிப் பத்திரிகைளைத் தொடங்கிய பெரும்பாலோனோர் இளம் எழத்தாளர்கள் என்றாலும் இலங்கையிலிருந்த முற்போக்கு இலக்கியபாரம்பரியம் இவர்களின் எழுத்துக்களில் பிரதிபலித்தது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.