புதியவை

பாடம்பல படிக்குதய்யா-சிவசூரி.

                                               பாடம்பல படிக்குதய்யா-சிவசூரி.
சிற்றிலொன்று செய்தளித்தான் - அந்த
தேவனென்று மகிழ்வுடனே
கற்றறிய வேண்டுமென - உயிர்
காதலுடன் போந்ததங்கே

உற்றம்சுற்றம் தோழரென - பலர்
ஓயாமல் ஓதுவதால்
பற்றிநின்ற பற்றதனால் - தினம்
பாடம்பல படிக்குதய்யா!

பெற்றபல போதனையால் - உயிர்
பெருவீட்டை அடைந்திடவே
பற்றெடுத்து வழிசெய்து - தினம்
பாடுபட்டு முன்னேற
உற்றபல பாக்கியத்தால் - இங்கு
உண்டான பாதையிலே
சிற்றடியை வைத்தபடி - துன்பச்
செக்கிழுத்துப் போகுதய்யா!

முற்றிலுமே கற்றபின்னர் - இனி
முன்னேறும் வழிவேண்டி
வற்றாமல் படித்திருக்க - நல்ல
மார்க்கமது பிடித்திடவே
பெற்றவுடல் நீக்கிவிட்டு - அது
பின்னோருடல் பெற்றுவிட்டு
மற்றுந்தன் வழியினிலே - அடி
வைத்தபடி நடக்குதய்யா!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.