புதியவை

உங்களுடன் என் மலேசிய பயணம் பற்றி தடாகத் தாமரைகள் கவிதை தொகுதி பற்றி

உங்களுடன் என் மலேசிய பயணம் பற்றி  தடாகத் தாமரைகள் கவிதை தொகுதி பற்றி

பெண்களாகிய நாம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் 
இந்த வேளையிலும்  எமது இலக்கியப் பணி  ஒரு போதும் தளம்பி விடாது 
என்பதில் எங்களுக்கு நிறைந்த நம்பிக்கையுண்டு
 ஒரு  நூலை வெளியிட்டு அதை உங்கள் முன் வெளிக்கொணர்வதென்பது இப்படியான நிலையில் ஒரு சாதனையாகத் தான் தெரியும்
தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் மூலமாக நாம்  'தடாகத் தாமரைகள்' எனும்கவிதைத்தொகுதியினை (சர்வதேச மட்டத்தில் 65கவிஞர்களின்  கவிதைகளுடன் ) மலேசியாவில்வெளியீடு செய்வதற்கு ஏற்பாடு செய்து இருந்தேன்
இந்த தொகுதிற்கு உங்களிடமிருந்து கிடைத்த ஆதரவையும் ,உற்சாகக் கரகோஷங்களையும் கண்டு பிரமித்துப் போய் விட்டோம் எந்த நிலையிலும் கூட உங்கள் ஆதரவு தான் எமக்குப் பெரிதாகப்படுகின்றது 

தடாகம் ஒரு போதும் 'நேர்மை' தவறாது அந்தவகையில் ;தடாகத்தாமரைகள்' தொகுதியில் பங்கு பற்றிய கவி உள்ளங்களுக்கு ஓர் உண்மையை நான் சொல்லவேண்டிய கட்டாயக்  கடமையில் உள்ளேன் காரணம் பல பேர்களின் எதிர் பார்ப்பை  என்னால் ஏமாற்ற முடியாது என்பதால் அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதில் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றேன் 

நாம் 24பேர்கள்அண்மையில்  மலேசியாவுக்கு(21-05 2016அன்று)சென்றோம் 
அதற்கு முன் நான் 03 வாரங்களாக கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தீவிர வைத்தியப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன்  எனது சின்ன மகள்  தான் மலேசியா செல்வோருக்கான ஏற்பாடுகளை செய்தார் அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்  

தம்பி ஓட்டமாவடி ரியாஸ், நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் ,என்மகள்  ரிஸ்ஹா ரிஸ்வி , தங்கை சிவரமணி,தங்கை ஆர் எஸ் கலா ஆகியோரது  பிடிவாத அன்பினால் வைத்தியசாலையில் இருந்தபடியே மலேசியாவுக்கு பயணமானேன் கூடவே என்னோடு ஏனைய அன்பான உறவுகளும் வந்தார்கள் 

மலேசியாவில்  பலநாட்கள்  நோயுடன் தான் நகர்ந்தது காலில்  ஒப்ப ரேஷன் செய்த  காரணத்தால் நடக்கவும் கூட பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்னோடு வந்த அனைவருக்கும் என் நிலை மன வேதனயைக்  கொடுத்தது காரனம்  அவர்கள் நேரில் கண்ட போது தானே உண்மை புரிந்தது 

ஆனாலும் என்னோடு வந்தஇந்த உறவுகள் (  தம்பி ஓட்டமாவடி ரியாஸ், நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் ,என்மகள்  ரிஸ்ஹா ரிஸ்வி ,தங்கை சிவரமணி,தங்கை ஆர் எஸ் கலா)ஆகியோர்
என்னை விட்டுப்பிரியால் முடிந்த சதுர உதவிகளை தாராளமாக செய்தார்கள்
 வரும் வரை  என்னை விட்டுப் பிரியாமல் என்னுடனே கூடவே இருந் தார்கள் 
அந்த வகையில் இவர்களுக்கு என் இதயம் பிழிந்த நன்றிகளை தெரிவிப்பதில்மனசந்தோஷம்  அடைகின்றேன் என் உயிர்  உள்ளவரை இவர்களை நான் என்றும் மறவேன் உற்ற உறவாய்  இவர்களுடன் இருப்பேன் இவர்கள் உறவை நான்என்றுமே  மதிப்பேன் 

இந்த நிலையில் இன்னும் ஓர் சோக செய்தி 
.............................................................................. 

ஆம் இந்த நிகழ்வு இன்று வரை எனக்கு ரொம்ப மன வேதனைகளை (துயரத்தை) தந்து கொண்டே உள்ளது 

மலேசியா செல்ல முன் நான் 'தடாகத் தாமரைகள்' எனும் நூலை அச்சிடுவதற்காக  ஒப்படைத்தேன் நல்ல கவிஞர் ஒருவரிடம்  ஏற்கனவே நான் கொடுத்த கவிதை நூலை அச்சடித்து தந்துள்ளார்
  அவர் ஓர்தமிழ்  சகோதரன் அழகான முறையில் சிறப்பாக அச்சடித்து தருவதாக வாக்கு உறுதி தந்தார்  
ஆனால் இறுதி வரை நம்பிக்கையோடு  காத்து இருந்தேன்  நம்பியும்  இருந்தேன்மலேசியா  செல்லமுன் இரு வாரங்களுக்குள் பல தடவைக்கு தொடபு கொண்டேன் பதில் இல்லை ஆனால் அழைப்பு போய்க்கொண்டே இருந்தது  பல தகவல்கள் பல வழிகளிலும் அனுப்பினேன் பதில் இல்லை எனது நெருக்கமான உறவுகளும் தொடர்பு கொண்டும் ஏமாற்றம்அடைந்தார்கள்    எது வானாலும் சரி முடிவு சொல்லி இருக்கலாம்  
 நம்பிக்கை வார்த்தை கேட்டு ஏமாறும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டேன்  முடியாது என்றாவது சொல்லி இருந்தால்  நான் வேறு விதமாக செய்து இருப்பேன் முடியும் என்று சொன்னதால் தான் இப்படி ஓர் நிலை

இந்த நிலையில் எப்படி நம்பி நட்பை வளர்ப்பது இது வரை, இன்று வரை நூல் பற்றி எந்த தகவலுமே சொல்லவில்லை  அதனால் அந்த உறவை விட்டு வெகு துரமாகி விட்டேன்  ஏன்  இப்படி நடந்தார் எதற்காக இப்படி  செய்தார் என்ன காரணம் எதுவுமே தெரியல்ல இதற்குப் பின் யாராவது இருந்தார்களா  அல்லது பெண் என்பதால் முன்னேற விடக்   கூடாது என்ற தடைவிதிப்போ இனத்துவேசமோ எதுவும் புரியல்ல ஆனாலும்  மலேசியாவில் என்னோடு வந்த சில கவிஞர்களது  நூல்களை வெளியிட சந்தர்ப்பம் கொடுத்தோம் எதுவானாலும் அல்லாஹ் ஒருவன் போதுமானவன் 


ஆனாலும் என்  முயற்சிகளை   நான்  கைவிடப் போவதும்  இல்லை முன் வைத்த காலை பின் வைக்கப் போகின்றவளும் அல்ல

 தற்போது நூல் நான் பிறந்த இடத்தில் அழகான முறையில் அச்சிட  ஏற்பாடு செய்து  விட்டேன் அதே நேரம் சொன்னபடி மலேசியாவில்(நூல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் வெளியிட அனுமதியும் பெற்று விட்டேன்)
என்பாசமிகு  அன்புத் தோழிமல்லிகா கண்ணன் ரெ .கோ ராசு தலைவர் அன்பு சகோதரர் ராஜேந்திரன்,சுடர்மதி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து  தருகின்றார்கள்  

அத்துடன் இந்த நூலுக்காக பணம் அனுப்புவதாக சொல்லி இதுவரை அனுப்பாது ஏமாற்றிய யாருடைய கவிதைகளையும் நாம் பிரசுரிக்க மாட்டோம்
 இது விடயமாக யாரும்தயவு செய்து  தொடர்பு கொள்ள வேண்டாம்வெகு சிறப்பான நூலாக  இன்னும் அழகாக  வெளியிடப்படவுள்ளதுஇது பற்றி நாம் அறியத்தருவோம்   
   
 இது இந்திய  உறவுகளின் கவனத்திற்கு 
.................................................................

 சகோதரர் இனிய நந்தவனம்ஆசிரியர்  சந்திரசேகர் அவர்களிடம் நீங்கள் பணம் அனுப்பி உள்ளதாக நீங்கள் எனக்கு அனுப்பிய தகவல் இது  .........................................
நூல் தொகுப்பிற்கான பங்குத்தொகை இந்தியப்பணத்தில் ரூ.1000-00 நந்தவனம் சந்திரசேகர் வங்கிக்கணக்கில் சேர்த்து விட்டேன்
.
02 -கவிஞர் கோவிந்தராஜன் பாலு
................................................................
Your third party transfer to sekar for Rs.1,000.00 completed successfully.TID: FT00471781
Amount Rs.1000 Indian Rupees sent to a/c 20015091889

03- Syed Mohamed
....................................
சகோதறி ஹிதாயா ...
நான் பணத்தை சந்திர சேகரன் அவர்களிடம் கொடுத்துள்ளேன்

04 -
Manimekalai Rajan
...............................

.திரு.சந்திரசேகரிடம் 1000/- கொடுத்தனுப்பியிருந்தேன். பெற்றுக் கொண்டீர்களா?

05 -Senthamari Kodi
.................................

அக்கா
தடாகத் தாமரைக்கென ₹ 1000 அனுப்பியுள்ளேன்

1000 INR


திரு சந்திரசேகரன் வங்கி கணக்கில் ரூபாய்1000 பணம் கட்டி அதன் மூலப்பிரதியை அனுப்பிஉள்ளேன் சரி பார்த்துக்கொள்ளுங்கள் சகோதரி


.................................................................................................

இவர்களின் வேண்டுதல் படி   நான் மலேசியாவில் (சகோதரர் இனிய நந்தவனம்ஆசிரியர்  சந்திரசேகர்)  அவர்களை  சந்தித்து (தடாகத்தாமரைகள்) கவிதை நூலுக்கான பணத்தை விசாரித்த போது 
இருவர் மட்டுமே அனுப்பி உள்ளார்கள் என்று மட்டுமேபொறுப்பற்ற நிலையில் சாதாரணமாக சொல்லி விட்டு போய் விட்டார்
ஆனாலும் அவர் ஒரு சஞ்சிகை ஆசிரியர் மற்றவர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையும் மதிக்கவேண்டும் காப்பாற்றவேண்டும் 

 என் சொந்தப் பணமாக  இருந்ததால் எழுதவே  மாட்டேன் இது பொதுப் பணம் அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டுமே 
 அந்த இருவர் பணத்தைக் கூட  என்னிடம் தரவில்லை
 06 கவிஉள்ளங்கள் பணம் கொடுத்து  உள்ளார்கள்அதற்கான ஆதாரம்  உங்கள் பார்வைக்கு உள்ளது 
உரியவர்கள் இது விடயமாக தொடரு கொள்வது நல்லது 
அடுத்த மாதம் நாம் இந்தியா வருகின்றோம் தகவல் விரைவில் தருவோம்
நம்பிக்கையற்றவர்கள் முன் பொறுப்பற்றவர்களின் முன் மதிக்காதவர்களின் முன் நாம் முடிந்தளவு இலக்கியத்தை வளர்க்கின்றோம்

 எது வானாலும் தங்கிச் செல்லும் உறுதியான மனசு உள்ளது துணிவோடு செய்வோம் நன்றி 

கவிநுறு கலைகள் வளர்ப்போம்
.

கலைமகள் ஹிதாயா ரிஸ்விNo comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.