புதியவை

ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR

ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR


ஈச்சம் பழம் விநியோகம் பற்றி பலவகையான முறைப் பாடுகள் பரவலாகப் பேசப் பட்டு வருகிறது. ரமழான் மாதத் திக்கான ஈச்சம் பழம் இலவசமாக மத்திய கிழக்கு நாட்டில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு விநியோகிக்கும் படி வழங்கப் பட்டது  நாடறிந்த விடயம் . ஆனால் இதுவரை சரியான முறையில் இவை பங்களிக்கப் படவில்லை என பல மோசடிக் குற்றச் சாட்டுக்கள் மக்களிடம் இருந்து பரவலாக வந்த வண்ணம் இருக்கின்றன,

இங்கு கவனிக்கப்  பட வேண்டிய விடயம் என்னவெனில் , இப் பழம்கள் எங்கு கையளிக்கப் பட்டன இதுக்கு எந்த திணைக்களம் பொறுப்பு என்று அறியவேண்டும் , இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் அல்லது ஜாமியத்துள் உலமா சபை என்பன இதுபற்றி உரிய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இதன் உண்மைத் தன்மையை அறியவேண்டும் 

இது சம்மந்தமாக தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் சவுதி வெளி நாட்டுத் தூதரகத்துக்கு  இதன் உண்மைத் தன்மை அறியவும் எதிர்காலத்தில் இது எவ்வாறு பகிர்ந்து அளிக்கப் படவேண்டும் என்ற விதி முறைகள் பற்றியும் ஒரு முறைப் பாட்டைசமர்பிக்கவுள்ளார் என எம்மிடம் கூறினார். 

மேலும் கூறுகையில் புனித ரமழான் மாதத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது எனவும் கூறினார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.