புதியவை

இஸ்லாமிய வரலாற்றோடு விளையாட வேண்டாம் கிழக்கின் எழுச்சிக் குழுவினருக்கு NDPHR எச்சரிக்கை

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா
இஸ்லாமிய வரலாற்றோடு விளையாட வேண்டாம் கிழக்கின் எழுச்சிக் குழுவினருக்கு NDPHR எச்சரிக்கை

நீங்கள் யாரோடும் அரசியல் விளையாடலாம் ஆனால் இந்த கிழக்கின் எழுச்சி என்று ஒரு குழுவினர் மாரிகாலத்தில் மழைக்குப் பின் வரும் கார்த்திகைப் பூச்சிகள் போன்று இஸ்லாமிய வரலாற்றோடு அவர்களது நடவடிக்கைகளை ஒப்பீடு செய்து மக்களது உணர்ச்சிகளைத் தூண்டுவதாக உள்ளது 

பத்ர் யுத்தம் இவர்களும் அதே போல் நடக்கப் போகிறார்களாம் என்று ஒப்பிடுகிறார்கள் , மற்றொன்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் இவர்களது எழுச்சியும் அதே போன்றதாம் , இது அவ் எழுச்சியின் தலைவர் என்று சொல்லப் படும் தலைவரால்  விடப் படும் கருத்துக்கள் .

ஒப்பிடுவதும் எதனோடு எதை ஒப்பிடவேண்டும் என்று ஒருதராதரம் தெரிய வேண்டாம் இந்த கேடு கெட்ட குழுவுக்கு 

இச் சவால்கள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையைக் கைப் பற்றுவதுக்காம் . நீங்கள்  எது வேண்டும் என்றாலும் செய்யுங்கள் சொல்லுங்கள் ஆனால் இஸ்லாமிய வரலாற்றோடு விளையாட வேண்டாம்  என்று நான் இவர்களை எச்சரிக்கிறேன் 

கிழக்கின் முஸ்லிம் சமூகம் இவ் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன் 

இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் மிகவும் கவலையுடன் கூறினார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.