புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில் இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்

கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  ஜூன்மாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும்கவிதைப் போட்டியில்  இரண்டாம்  இடமாக  தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் கே.என். இராமகிருஷ்ணன்


தலைப்பு **நம்பிக்கைத் துரோகம்
சுயநலச் சேற்றில்
சிக்கிச் சின்னாபின்னமாகி
புரிதல்களின் அடிப்படையை
குழிதோண்டி புதைக்கும்
நட்பே நம்பிக்கை துரோகி
நட்புத் தொடக்கம் நன்றே
தீய நட்புகளின் இணைப்பில்
நல்ல நட்புக்குத் துரோகமா
அறிவு வேலி வேண்டாமா
சிந்திப்பதில்லை சிற்றறிவு
உடல் பொருள் ஆவியென
அத்தனையையும் நம்பும் நட்பை
உண்மை விளம்பி என நடித்தே
பித்தனாக்கும் எத்தனை
நண்பன் என்பதா துரோகியவன்
நம்பிக்கை நாசம் விளைப்பவன்
நட்புக்குத் தெரியாது நாடகமாடி
கண்ணெனக் காத்த நண்பனை
துன்பக்குழியில் தள்ளியே
தன் வினையாற்றும் பதரவன்
பின் வினையறியாத மூடன்
நம்பிக்கைக்கு துரோகமானவன்
துரோகிகளை மன்னிக்கலாம்
மனம் திருந்துவாரெனில்
நம்பிக்கை துரோகிகளை
மன்னிப்பது பொருளற்றதே
தெரிந்தே செய்யும் குற்றம்
தண்டனைக்கே உரியதாகும்
நட்புக்கு இலக்கணம் செய்வோம்
நம்பிக்கை துரோகம் வேரறுப்போம்
மனப் புரிதல்களின் பலம்கூட்டுவோம்
நாளும் உண்மையாய் வாழ்வோம்
கோள்கள் மாறினாலும் கூட்டாவோம்
நெஞ்சுக்கு நீதி செய்தே வாழ்வோம்.

கே.என். இராமகிருஷ்ணன்,B,Com., B.Litt.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.