புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு . "கவின்கலை" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் புதுவை பிரபா -புதுச்சேரி

   "கவின்கலை" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் புதுவை பிரபா -புதுச்சேரி


தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  ஜூன்மாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில்  மூன்றாம் இடமாக  தெரிவு செய்யப்பட்டு . "கவின்கலை"  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் புதுவை பிரபா -புதுச்சேரி

தலைப்பு-   நம்பிக்கைத் துரோகம்

காலக்கடலில்
வாழ்க்கைப்படகில்
துடுப்புகளாய்ச் சிலரது
வார்த்தைகளைக் கொண்டு
பயணிப்போம்
நடுக்கடலில்
துடுப்பினைப் பிடுங்கி
தூற எரிவதுபோல்
கொடுத்த வாக்கை
காப்பாற்றாமல்போவார்கள் சிலர்.
தத்தளிப்போம்
தவியாய்த்தவிப்போம்
செய்வதறியாது
விழிப்பிதுங்கி நிற்போம்
கவனமாய் இருங்கள்
தோழர்களே...
நம் எதிர்ப்பார்புகளை
ஏமாற்ற நஞ்சினால்
எதிர்பாராமல்
சாய்த்துவிடும்
வஞ்சகர்களை
வாழ்க்கைப்பயணத்தில்
எங்கேனும் சந்திக்கக்கூடும்
இவர்கள் ...
கொடுத்த வாக்கை
காப்பாற்றாதவர்கள்
உண்ட வீட்டிற்கு
இரண்டகம் செய்பவர்கள்
மோசடிக்காரர்கள்
இத்தகையோரின்
தொழிற்பெயர்
நம்பிக்கைத் துரோகிகள்
நண்பர்களே...
நம்பிக்கைத் துரோகிகளை மட்டும்
தயவுசெய்து
மன்னித்துவிடாதீர்
ஆம்.
நம்பிக்கைத் துரோகம்
மன்னிக்கக்கூடாத
பெருங்குற்றம்.
ஒன்று செய்யுங்கள் ...
நம்பிக்கைத் துரோகிகளின்
பெயர்களை
இறந்தவர்கள் பட்டியலில்
இன்றே எழுதிவையுங்கள்
இன்னார் இன்னரெல்லாம்
நம்பிக்கைத் துரோகிகள் என்று
அடுத்தவருக்கும்
அறிமுகம் செய்யுங்கள்

புதுவை பிரபா -புதுச்சேரி

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.