புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை பெரும் கவிஞர்கள்

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம்    மாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி யில் பங்கு பற்றி பாராட்டுக்களை   பெரும்  கவிஞர்கள்  
                                    நம்பிக்கைத் துரோகம்--றிப்கா அன்ஸார்
 
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைதீர்ப்பு - இங்கு
நம்பினார் வாழவிடுவதில்லை அவன் எதிர்பார்ப்பு
நாவினிக்கப் பேசியே நயவஞ்சகம் செய்திடுவார்
நம்பவைத்து கழுத்தறுப்பது நந்திகளின் செயலதுவாம்.....

நாவினிலே தேன் வைத்து நயமாய் பேசுவான்
நானிலம் எங்கிலும் நல்லவனாய் பெயர் வீசுவான்
நல்கிடும் போதிலும் நசுக்கியே ஏசுவான்
நம்பிக்கை கொண்டார் துரோகத்தை காட்டிடுவான்..........

உணர்வுகள் துறந்து உடன்பிறந்தோர் மறந்திடுவர்
உடனுள்ள மனையாள் விட்டு பிறர் மனை கூடுவர்
கூடஇருந்து கும்மாளமிட்டு குளிபறித்திடுவர்
வஞ்சப்பழி தீர்க்கும் வன்மர்களின் நிலையிதுவாயிடும்....

நியாயங்கள் அநியாயமாக தண்டிக்கப்படும்
அநியாயங்கள் நியாயமாக வெற்றிவாகை சூடப்படும்
உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்வது தகுமோ?
நேசத்தில் பிறந்தவனால் தன் தேசத்துக்கு துரோகமோ?

காட்டிக் கொடுத்தவனும் கூட்டிக் கொடுத்தவனும்
காலம் காலமாய் செய்வது நம்பிக்கை துரோகம்
காதல் என்ற மகுடம் தாங்கி காம இச்சைதனை
கச்சிதமாக நிறைவேற்றும் காதலன் துரோகம்.....
..
.
புனிதத்தின் புகலிடமாம் மனிதம் என்பார் - இங்கு
மனிதத்தில் புனிதம் செத்துக்கொண்டிருக்கிறது
உயிர் கொடுப்பான் துயர்துடைப்பான் நண்பன் என்பான்
உயிர் உள்ளவரை உற்ற நண்பன் என்று நம்பிவிடாதே...
.
இன்சொல் பேசி இறக்கும் வரை இனித்திடுக
இனிதே வாழ்வை வழமாக மாற்றிடுக
ஈனச் செயல்களிலிருந்து இயன்றவரை காத்திடுக
இல்லங்கள் தோறும் இன்பக் களிப்பைக் கொட்டிடுக...
...
சான்றோர் செப்பிய சொற்படி சீர்துக்கிடுவோம்
சொல்லிலும் செயலிலும் கயமையை வென்றிடுவோம்
நம்பவே நடந்திடு நம்பி நடவாதே என வாழ்ந்திடுவோம்
நம்பிக்கை துரோகத்தை தூர வைத்திடுவோம்..
.
---றிப்கா அன்ஸார்

                      தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..


தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..
" குறட்பா "
நம்பிவந்த பேர்களை நட்டாற்றில் விட்டே
நயவஞ்சம் செய்வ துஊம் . .
.
இருக்கின்ற போதுவந்து இல்லாத நேரத்தில்
இல்லாமல் பாவ துஊம்
. . .
கரம்பிடித்த இல்லாளை கைவிட்டே வேறு
கரம்பிடிக்க செல்வ துஊம் .
. .
ஊதியமே தாராமல் ஊழியரை செல்லந்தர்
ஊக்கமின்றி சாய்ப்ப துஊம் .
. .
அரசின் ரகசியத்தை ஆங்காங்கே சொல்லி
முரசாய் ஒலிப்ப துஊம் . .
.
கல்விக்கண் காட்டும் கடவுளாம் ஆசானை
கண்டபடி ஏசு வதும் .
. .
தமிழை இழிவாய் தரமின்றி கூதனில்
தம்போக்கில் பேசு வதும் . . .
பேணிகாத்து மேனிநொந்த பெற்றோர் தமையே
பரிதவிக்கப் பார்ப்ப துவும் . .
.
கல்விஈய மானமின்றி காசுகேட்டு பெற்றோரை
கண்கலங்க வைப்ப துவும் . .
.
துரோகமே என்றும் துரோகமே என்றென்றும்
நம்பிக்கைக் கொன்றோருக் கே . .

; கவிஞர்;தா.தமிழ் தங்கராஜ் ..


நம்பிக்கைத் துரோகம்*கவி. சுந்தர்ஜீ


நம்பிக்கைத் துரோகம்*கவி. சுந்தர்ஜீ

உயிர் கொடுப்பான் தன் நட்பின் துயர் துடைப்பான்
உணர்வுமிகு அன்பைக்கொடுப்பான்
ஒரு நாளும் மறவாத நட்புப்பயிர் வளர்ப்பான்
அவனை உயிர் நண்பன் என்பார்

பெற்ற தாயிடம் சொல்ல இயலாததை
கட்டிலில் ஒன்றான உற்றவளிடம்
சொல்ல விரும்பாததை
நண்பனிடம் சொல்வோம்
நல்ல நட்புக்கு கிடைத்த பெருமையது

நம்பும்ஒரு நண்பனுக்கு
இழைக்கின்ற துரோகம்
நம்பிக்கை துரோகம்

நாளும் இதயத்தை குத்தி
கிழிக்கும் நய வஞ்சக
துரோகம்
பூரூட்டஸ் சீசரிடம் காட்டியது
உயரிய நட்பு

நட்பைத்தான் சீசர் தன் உயிராய்
நினைத்தான்
கட்டியயணைத்து கத்தியால்
குத்துவது
பட்டி தொட்டி யறிந்த
நம்பிக்கை துரோகம்

ஏசுதான் எம் கடவுள் என்று
ஏற்றி குரல் தந்தார் சீடர்
பன்னிருவர்
சீடரில் ஒருவன் யூதாஸ் அவன் பெயர் முப்பது வெள்ளிக்கு
நட்பை சோரம் போக வைத்தான்

காட்டி கொடுத்தவனும் கூட்டி
கொடுத்தவனும்
காலம் காலமாய் செய்யும்
நம்பிக்கை துரோகம்

காலத்தால் அழிக்க இயலா
கொடூர துரோகம்
நாட்டில் நிலவும் இந்த
நம்பிக்கை துரோகம்

கவி. சுந்தர்ஜீ                               நம்பிக்கைத் துரோகம்*மு.இ.பாத்திமா றுஷ்த

நம்பிக்கைத் துரோகம்*மு.இ.பாத்திமா றுஷ்தா
பசாங்கு மானிடர்களின்
சூழ்ச்சியின் தந்திரமாம்
மானிட மனங்களை
சுக்கு நூறாய் தகர்த்திடுமாம்.....
நிறைவேறா ஆசைகளின்
நிலையான இருப்பிடமாம்
கண்ணீர் துளிகளின்
ஓயாத சங்கமமாம்....
நினைத்தாலும் வலித்திடும்
நீங்காத ரணங்களை
மறக்காமல் தந்திடும்
மறவாத நினைவதாம்.....
மானிட வாழ்வில்
மாற்றத்துக்கு இடமில்லா
மறுப்புக்களின் ஊற்றே
துரோகத்தின் ஆரம்பமாம்.....
நம்ப வைத்து கழுத்தறுத்து
நொடிப்பொழுதில் ஏமாற்றி
நா பிரள்ந்து பேசும்
நந்திகளின் செயலதுவாம்....
நண்பனென்றும் பாராது
நம்பிக்கைக்கு மோசடியாய்
வஞ்சப் பழிதீர்க்கும்
வன்மர்களின் நிலையிதுவாம்.....
காதலென்ற மகுடம் தாங்கி
காமமாம் இச்சை தனை
காத்திரமாய் நிறைவேற்றி
கர்ப்பிணியாய் கைவிடும்
காதலனின் இழிநிலையாம்....
உறவென்ற பெயரினிலே
உள்ளதை சுரண்டிக்கொண்டு
இல்லாத தருணமதில்
இரண்டு கையை விரித்திடுமாம்....
எதிரியை விட கேவலமாய்
அற்ப சுகத்தை நாடி
அணு அணுவாய் பழிவாங்கும்
ஆன்மாக்களும் உண்டாம்
மனதளவில் புதைத்தபடி....
பசுத்தோல் போர்த்திய புலியாய்
வெகுளி போல் பழகி
மடு வெட்டும் விஷமிகளை
அறியத் தான் ஆயுதமுண்டோ பாரில்????

மு.இ.பாத்திமா றுஷ்தா

                                  *தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -மு.யாகூப் அலி .
*தலைப்பு **நம்பிக்கைத் துரோகம் -மு.யாகூப் அலி .

விடுதலைப்போரில் மரணித்த
தியாகிகளுக்கு நாம் செய்தது ,
(நம்பிக்கை துரோகம் )


நாட்டுக்காகவும் -சமூகத்துக்காகவும்
நாம் செய்வோம் என்பதை ஏமாற்றியது ,
(நம்பிக்கை துரோகம் )

காப்பாற்றுவான் என்று
கடன் வாங்கி அனுப்பி இழந்தது ,
(நம்பிக்கை துரோகம் )

கழுத்தில் கட்டுமுன்
வயிற்றில் கொடுத்தவனால் .
(நம்பிக்கை துரோகம் )

நட்பை பயன் படுத்தி
தப்பை செய்த உறவும்.
(நம்பிக்கை துரோகம் )

கட்டிலுக்கு மனைவியும்
காமத்திற்கு பிற தொடர்பும் ,
(நம்பிக்கை துரோகம் )

நவீனம் வந்த போதும்
நல்லவனாய் உளவுபார்ப்பது,
(நம்பிக்கை துரோகம் )

நம்பிக்கை என்பது கருபோல -அதை
கருவிலே சிதைப்பதற்கு சமம் .
(நம்பிக்கை துரோகம்)

நம்பிக்கை என்பது தாய் போல -அதை
முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு சமம்.
(நம்பிக்கை துரோகம் )

நம்பிக்கை என்பது மனைவிபோல -அதை
நாகரீகமற்று பகிர்வதற்கு சமம் .
(நம்பிக்கை துரோகம் )

நம்பிக்கை என்பது கற்பை போன்று-அதை
இழந்தபின் எதிர்பார்ப்பது தவறு ,
(நம்பிக்கை துரோகம் )

நரகம் என்பது உழைப்பவர்களுக்கு தெரியும்
சுவர்க்கம் என்பது நம்பிக்கைக்கு மட்டுமே கிடைப்பது .
நம்பிக்கை வைத்து நாசம்போனே மக்களின்
நிம்மதியில்லா வாழ்வை -நம்பிக்கை துரோகத்தில் பெற முடியாது !

குடும்பத்தில் நம்பிக்கை வைப்போம்
நாட்டுக்கு தன்னம்பிக்கை அளிப்போம்
.
:-மு.யாகூப் அலி .

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.