புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் சந்திரகௌரி சிவபாலன் - ஜெர்மனி

கவியருவி  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்  சந்திரகௌரி சிவபாலன் - ஜெர்மனி


தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  ஜூன்மாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில்    முதலாம் இடமாக  தெரிவு செய்யப்பட்டு கவியருவி  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்  சந்திரகௌரி சிவபாலன் - ஜெர்மனி

தலைப்பு **நம்பிக்கைத் துரோகம்

சந்தர்ப்ப சூழ்நிலை சாக்கடையுள் தள்ளும்
சஞ்சல மனதது சங்கடத்துள் தள்ளும்
வெந்தழல் போலவே வேதனை செய்யும்
வென்றிடுன் மனததை வெற்றியே காண்பாய்

நம்பவே நடந்திடு நம்பியே நடவாதே
நானிலம் எங்கிலும் நாமறியா மாந்தர்கள்
நாவினிக்கப் பேசியே நயவஞ்கம் செய்வார்
நாடிடும் போதினில் நசுக்கியே அழிப்பார்

கொள்கைகள் கொண்டவர் குறிப்பினை வீழ்த்துவார்
கள்ளமாய்ப் பேசியே கருத்தையும் கவர்வார்
எள்ளெனும் போதினில் எண்ணெயாய் நிற்பார்
ஏந்திட நினைக்கையில் தூக்கியே எறிவார்

காற்றுக்கும் மனதுக்கும் வேலியிட முடியுமா
கண்களால் காண்பதை நம்பிட முடியுமா
சோதனை வேதனை சேர்ந்திடும் போதினில்
சொர்க்கமாய் மனதை மாற்றிட முனைந்திடு

கள்ளமில்லாப் பேச்சினில் கயவரில் மயங்காய்
கலப்பட உலகினில் உண்மையை உணர்வாய்
நம்பிக்கை கொண்டவர் துரோகத்தைக் காண்பாய்
நம்பியே வீணாய் நாளதைக் கடவாய்
சொந்தமாய் சிந்தனை சிந்தையில் கொள்வாய்
சொல்லிலும் செயலிலும் கயமையை வெல்வாய்
வெல்வதை மனதினில் ஏற்றியே வாழ்வாய்
வெற்றியே வாழ்வினில் உச்சமாய்க் கொள்வாய்

சந்திரகௌரி சிவபாலன் - ஜெர்மனி

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.