புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஜூன்மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் பிரியத்தமிழ் உதயா விவேக்

    கவினெழி   பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  பிரியத்தமிழ் உதயா விவேக் 
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு  ஜூன்மாதம் 2016  நடத்திய உலகம் தழுவிய மாபெரும்  கவிதைப் போட்டியில்  சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டு கவினெழி   பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்  பிரியத்தமிழ் உதயா விவேக் 

நம்பிக்கைத் துரோகம்

இதோ இங்கே
வழியும் குருதியும் வடியும் கண்ணீரும்
கணக்கற்ற நம்பிக்கைத் துரோகங்களின்
இரக்கத்தை தேடியல்ல ....
அந்த சிதைந்த சித்திரக் கீறல்கள்
வாழ்க்கை வன்முறையில் ஒளிந்து
மூழ்கடிக்கப்படவே. ...!
செத்துக் கொண்டிருக்கும் உடன்பாட்டை
நியாயங்கள் தண்டிக்கப் படும் போதும்
வலியது வெற்றியின் உலகில் மனிதம் !
துரோகங்களின் நம்பிக்கை இன்றிய
ஈனஸ்வரத்தில் இன்னும் உயிருடன்
முடிவின்றி கரைகிறது !
கூட இருந்து குழி பறிக்கும்
கொட்டித் தீர்க்கும் பெரு வெள்ளம் போல
மனித குலத்தின் அழியாத கறைகளை
எவ்வாறு அகற்ற முடியும் ?
மை பொதி விளக்குப் போல
எத்தனை ஒளி பொருந்திய மனதிலும்
ஏன் இந்த இருள் சூழ்ச்சி ?
அப்பம் பிரித்துக் கொடுத்த குரங்கு போல
அடி மனதில் புதைந்த சேற்று மண்ணை
அகற்ற வேண்டாமா. ...?
உண்ட வீட்டுக்கு உப்பு நீட்டலாமா ?
ரெண்டகம் செய்வது நியாயமாகுமா ?
பாதக மனதை விட்டு
வெளியே வர முடியாதா ..?
கணவனுக்கும் மனைவிக்கும்
நண்பனுக்கும் நண்பனுக்கும்
பெற்றவர்க்கும் பிள்ளைகளுக்கும்
ஒரு தாய் வயிற்றின் உற்பத்திகளுக்கு
ஆசான் மாணவனுக்கு
தேசத்தில் பிறந்தவனே தன் தேசத்திற்கு
ஏன் இப்படி குரோதம் ?
கோட்டையில் ஏறிவிட்டு
படிக்கட்டுகளை உடைத்து விடாதீர்கள்
அவமதிப்புக்களை தாங்காது
இடிந்து சாம்பலாகக் கூடும் !
ஒரு விருட்சத்தில் படர்ந்த கொடி
அவ்விருட்சத்தையே அழித்து விடுவது போல
அழித்து அழிந்து விடாதீர்கள் !
இந்த வாழ்க்கைச் சாலையை
துரோகத்தால் மைல் கல் இடாதீர்கள் !
ஒரு திருடனைப் போல
ஓர் அழையா விருந்தாளி போல
அது உங்கள் வாசலில் வந்து நின்றால்
அதன் அன்பை, தியாகத்தை, மனதை,
புண் படு செயலை தூரச் செல்ல விடுங்கள்
ஒரு புன்னகையை வீசி !
ஓராயிரம் பொய்களால்
போர்த்தப்பட்ட ஒரு மெய் எதற்கு ?
அதாகவே போக விடுங்கள் !
ஆனாலும் அது அதிக கடினம் எனினும்
ஒரு முறை
ஒரே ஒரு முறை மன்னித்து விடுங்களேன்
அது அந்த நொடியிலேயே மரணத்தை எய்தி
அடுத்த கணமே மனிதனாக்கப்படலாம் !
- பிரியத்தமிழ் உதயா விவேக் -

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.