புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 ஜூலை மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு"கவின்கலை" பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர் சுபாரஞ்சன் டென்மார்க்

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு   2016 ஜூலை மாதம்  நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமாக  தெரிவு செய்யப்பட்டு"கவின்கலை"  பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் 

                                                      கவிஞர் சுபாரஞ்சன் டென்மார்க்             
                                                        தலைப்பு:முதுமைக் கவி

பற்றுக்களில் இருந்து விடுபட்ட
பாதையில் பாதங்கள் தள்ளாட
உள்ளாடும் உணர்வோடு
பயணங்கள் தொடர்கிறது
பால்வீதிப் பரவசங்களை
பார்த்ததும் மறக்கின்றேன்....

சுவை சொட்டப் பாடிய
சொற்கள் எல்லாம் சிறகு முளைத்து
என் சமவெளியை நிறைத்து
சங்கீதமாய் ஒலித்ததை நினைக்கின்றேன் .
.
அறிவை பொருளை அனுபவத்தை
உலக நன்மைக்குப் பரிசளித்து
உயிருக்குள் ஒளிந்திருந்த
அணுக்களை பரம்பரையாக்கி
அணுவுக்குள் நிறைந்த
ஆற்றலைப் போல்
என் சக்திகளை எல்லாம்
ஈகை செய்து இன்புற்றதை நினைக்கின்றேன் ..

இப்போ
மீளமுடியாத முதுமையில்
குவியப்படுத்த முடியா
சொற்கள் இடம்மாறிக் கொள்ள
பிரார்தனைகளே நிரம்பி வழிகிறது
பொறுப்புக்களில் இருந்து விடுபட்டு
பிறர் தேடாத பொருளாகி
வலுவிழந்து போகிறேன்
நானாக அல்ல தானாகவே 

இயந்திர வாழ்வில் எந்திரனாய் மாறும்
என் பரம்பரையின் கனவுகள் பறிக்கப்படாத வாழ்வுக்கு
வரம் கேட்டு வாழ்த்தி
சுமைகளை கழித்து சுகமாக நடக்கின்றேன்...

சுபாரஞ்சன் டென்மார்க்    

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.