புதியவை

தடாகம் வாழ்க - [ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ]

 

                              [ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ]

                                                                    தடாகம் வாழ்க !
                 
                  தடாகம்  கண்டேன் தமிழ்த் தாமரை பூக்கக்கண்டேன்
                   உடலெங்கும் கலையுணர்வு ஊறக் கண்டேன்
                   உண்மையிலே தடாகத்தில் உயிர்ப்பும் கண்டேன்
                   தமிழுலகில் பலமலர்கள் பூக்கும் வண்ணம்
                   தலைநிமிர்ந்து தடாகம்வர தமிழை ஏந்தி
                   அகமகிழ்ந்து வாழ்த்துகின்றேன்  தடாகம் வாழ்க ! 


                   நல்லதமிழ் சஞ்சிகையாய் வளரவேண்டும்
                   நாடெல்லாம் இருப்பாரும் நாடவேண்டும்
                   வல்லமையை காட்டிநிற்கும் வகையில்நாளும்
                   வளர்ந்தோங்கி நிற்கவென்று வாழ்த்துகின்றேன் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.