புதியவை

தமிழே வா!வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.

                                      தமிழே வா!வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.


தமிழே எழு! தடம் பதித்து
தமிழே எழு! என்னோடு நீயிருந்தால்
அமிழாது நானிருப்பேன் வா தமிழே!

உமிழாது என்னை அணைத்துத் தழுவு
புலமையின் வண்ணம் எகிறி விரிந்திட
குலவிக் கூடி இறுக அணைத்திடு!
வெலவெலத்து விலகேன்! வித்தைகள் காட்டி
பலவித பண்கள் பதிகங்கள் பாடுவேன்.

சீவனே சுகித்து ஒளி வெட்டட்டும்
சீரான கவிபூ வரிகள் கொட்டட்டும்!
சிர்வரிசை இலக்கணமாய் எதுகை மோனையாய்
சீர்மை பெற்று மனம் தீண்டட்டும்.

நானே மயங்குகிறேன் நானிலத்தில் உருகுகிறேன்.
தேனாய் இனிக்கத் தமிழில் கரைகிறேன்.
தித்தகிட தித்தகிட தித்திப்பில் தினம்
தில்லானா தேடித் தேடி ஆடுகிறேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.