புதியவை

வாழ்வினையே நடு ! ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )

   

                   எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
 

                                                    வாழ்வினையே நடு !

         
அன்பைநடு அறிவைநடு
        ஆணவத்தை அகற்று
        இன்பைநடு ஈகையைநடு
         எண்ணமதை திருத்து

         உண்மைநடு உழைப்புநடு
         ஊழலினை விரட்டு
         உன்மனதில் இலட்சியத்தை
         ஊன்றிநின்று நடு !

         இலக்கியத்தை என்னாளும்
         இங்கிதமாய் நடு
         நிலத்திலுள்ள மாந்தரிடம்
         நிம்மதியை நடு
         உனக்குதவி செய்வாரை
         உள்ளமதில் நடு
         உண்மையது யாவருக்கும்
         உதவுமென்று நடு !

         களவுதனைக் கழைந்துவிட்டு
         கண்ணியத்தை நடு
         காதலுடன் வாழ்வெலாம்
         கல்விதனை நடு
         கடவுள்பற்றி நினைக்கின்ற
         கருத்தினையும் நடு
         கண்களிலே என்னாளும்
         கருணையையும் நடு !

         பிறர்தம்மை நோகாவிடா
         பெருமனதை நடு
        குறைசொல்லா வகையினிலே
         குணங்களையும் நடு 
         நிறைவான வாழ்வுவர
        நிம்மதியை நடு
        மறைவான எண்ணங்களை
        மனத்தைவிட்டே எடு !

        வள்ளுவத்தைப் படிக்கின்ற
        எண்ணமதை நடு
        வாழ்வினிலே பெற்றோரை
        மனமதிலே நடு
        கண்ணியத்தில் உயர்ந்தோரை
        கருத்தினிலே நடு
        காலமெலாம் நினைக்கும்படி
        வாழ்வினையே நடு !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.