புதியவை

:அன்புலக ஆட்சி -ராம்க்ருஷ்

:                                               அன்புலக ஆட்சி -ராம்க்ருஷ்


மதங்கள் அன்பையே ஆராதிக்கின்றன
வேற்றுமை அதில் இல்லையே
அவரவர் மதத்தில் அவரவர்க்குப் பெருமை
அதில் அடுத்தவர் தலையிடல் தகுமோ

உயர்ந்தது தாழ்ந்தது அன்பிலில்லை
மனம் கருணை வடிவில் ஒரே இனமே
தினமும் அதை மனதில் இருத்திடலாமே
குணம்தனை செழுமைப்படுத்திடலாமே

சின உணர்வுகள் சேராத நிலை பெறலாம்
இன உணர்வுகளின் மோதலும் வேண்டாம்
மன முறிவுகளின் மயக்கமும் வேண்டாம்
தின சச்சரவுகளும் சரசமாட வேண்டாம்

சாதிச் சண்டைகளை புறந்தள்ளிடலாமே
மோதி மண்டைகள் உடைய வேண்டாமே
நாதியில்லாத நிலைபெற வேண்டாமே
மேதினியில் அன்பில்லா நிலைவேண்டாமே

அன்பு மனம் சினம் கொள்ளாது காண்
அன்பு அரவணைக்கும் தன்மையது காண்
அன்பு வேறுபாடுகளற்ற முகமது காண்
அன்புலக ஆட்சியே விடிவெள்ளி காண்.

ராம்க்ருஷ்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.