புதியவை

உலகம் தழுவிய பிரமாண்டமான கவிதைப் போட்டி ஆகஸ்ட் மாதம் 2016 முடிவுகள்

உலகம்தழுவியபிரமாண்டமானகவிதைப் போட்டி ஆகஸ்ட் மாதம் 2016

முடிவுகள் 


தலைப்பு.ஒலிம்பிக்.

போட்டி இலக்கம் -81


இம்முறைநாம் கொடுத்த தலைப்புக்கு அதிகமானவர்களால் பங்கு பற்ற முடியாயுள்ளதை புரிந்து கொண்டோம் 

ஆனாலும்சிலர்எங்களால்எந்ததலைப்பானாலும்எழுதமுடியும்என்றுகாட்டி விட்டார்கள் 

அவர்களுக்குதடாகத்தின்வாழ்த்துக்களும்பாராட்டுக்களும்
   

முதலாவதுஇடத்தைப்பெற்று"கவியருவி.பட்டமும்',சான்றிதழும்"பெறுகின்றார் 

                      எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா
 
கவிதை
 தலைப்பு
ஒலிம்பிக் ( உள்ளமதில் நிறைத்திடுவோம் !)

ஒலிம்பிக்கின் பெயர் கேட்டால்

உளமெங்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்
நலம் கிடைக்கும் எனநினைந்து
யாவருமே பங்குபற்ற மனந்துடிக்கும்
இலை மறையாய் இருப்போரும்
இதன்மூலம் வெளிச்சம் காண்பர்
எனவேதான் யாவருமே விரும்பிநின்று
எதிர்ப்பார்ப்பர் ஒலிம்பிக்கின் வருகைதன்னை !
மட்டைப் பந்தைத் தவிர்த்து
மற்றைய விளையாட்டு எல்லாம்
வரிசையாய் ஒலிம்பிக்கில் வந்துமேநின்றுவிடும்
இஷ்டம் உள்ள விளையாட்டில்
எவருமே பங்கு கொண்டு
கஷ்டமுடன் உழைத்து நின்று
கண்டிடுவார் வெற்றி எல்லாம் !
ஓடிடுவார் ஆடிடுவார்
உச்சமாய் குதித்திடுவார்
உள்ளகமாய் வெளியகமாய்
உணர்வுடனே செய்திடுவர்
வெற்றிபெறும் இலக்குடனே
வீரரெலாம் குவிந்திடுவர்
வெற்றிவீரர் தமைப்பார்த்து
வியந்திடுவார் உலகமக்கள் !
கிரேக்கமதில் தொடங்கி கிடப்பிலே கிடக்காமல்
கீழ்விழுந்தும் மேலெழுந்தும் கிறுங்கவைத்தே நிற்கிறது
ஆவலுடன் காத்திருக்கும் அகிலவுலகத் திருவிழாவாய்
அமைந்துவிட்ட ஒலிம்பிக்கை அனைவருமே விரும்புகின்றார் !
சாதிமதம் பாராமல் தாழ்வுயர்வு நோக்காமல்
நிறவெறியும் பார்க்காமல் நிற்கிறதே ஒலிம்பிக்கும்
ஒடுக்கப்பட்ட பெண்கள்தமை உளமார அணைத்ததனை
ஒலிம்பிக்கின் உயர்வெனவே உணருகிறார் உலகமக்கள்
தங்கம்வரும் வெள்ளிவரும் தரமான பரிசும்வரும்
மங்காத மனிதத்துவம் தருவதுதான் மகத்துவமே
எங்கிருந்து போனாலும் ஏற்றுநிற்கும் ஒலிம்பிக்கை
எல்லோரும் விரும்புவதால் ஏற்றமாய் வளர்கிறதே !
விளையாட்டுப் போட்டியென விளையாட்டாய் எண்ணாதீர்
விளையாட்டால் மனமெல்லாம் விரிவடையும் தெரிந்துகொள்வீர்
உலகத்தார் ஒருங்கிணையும் உயர்வான காரியத்தை
ஒலிம்பிக்கே உணர்த்துவதை உள்ளமதில் நிறைத்திடுவோம் !இரண்டாவதுஇடத்தைப்பெற்று"கவித்தீபம்பட்டமும் ,சான்றிதழும்பெறுகின்றார்
 
                          கவிஞர்.தா.தமிழ் தங்கராஜ் -சென்னை:

                        தலைப்பு -ஒலிம்பிக் எண்சீர் விருத்தப் பா (மரபுக் கவிதை )

திறனறியும் திருநாளாம் ஒலிம்பிக் நாளில்
திணறவைக்கும் அப்பப்பா மக்கள் கூட்டம்
அறநெறியில் போட்டிகளும் நன்றாய் ஆங்கே
அமைதியுடன் அரங்கேறும் ஆட்டம் பாட்டம்
சிறப்புடனே பந்தயங்கள் நடக்கும் பண்பாய்
சிரம்பணிந்து பலநாடு கலக்கும் அன்பாய்
கறமின்றி கரமோங்கும் களிப்பில் வீரர்
கலந்தேதான் வெற்றிவாகைச் சூடிக் கொள்வர்

சாதிமத பேதமெல்லாம் அங்கே யின்றி
சமத்துவமாய் மக்களெல்லாம் ஒன்றாய்க் கூடி
நீதியுடன் நேர்மையுடன் தீபம் ஏந்தி
நிமலமிலா விளையாட்டுண் டுகீதம் பாடி
தேதிவைத்து குறித்தநேரம் உலக மக்கள்
தேர்ச்சிபெற போட்டியிட திரண்டு நிற்பர்
சேதிகளும் உடனுடனே செய்தித் தாளில்
செம்மையுடன் வந்திடுமே நாளும் தேனாய்

உற்சாகம் ஊற்றெடுக்கும் உலகம் யாவும்
உலகத்தார் ஒருங்கிணையும் அந்த நாளில்
கற்கண்டாய் தினமினித்தே நகரும் நாட்கள்
கண்கவரும் பலதேச மனிதப் பூக்கள்
ஏற்றமுடன் பிரேசிலென்ற இனிய நாட்டில்
எழுச்சிமிகு விளையாட்டாய் ரியோடி ரியோ
மாற்றமுடன் ஆண்பெண்கள் வீரர் சேர்ந்தே
மார்தட்டி வெற்றிபெறும் ஒலிம்பிக் நாளே

ஆலிவிலை கிரிடத்தை சிரசில் சூடி
ஆங்காங்கே வீரர்காள் வீரம் பொங்க
மாலியவன் ஓவியமாய் வீரர் எல்லாம்
மண்டிலமாய் அழகுசேர்ப்பர் இனிதே அங்கு
கோலவிழி கோதையரோ வலமும் வந்தே
கொள்கையுடன் வெற்றிபெற உறுதிப் பூண்டே
கேலிகளை உடைத்தெறிந்தே வெற்றி பெற்றே
கேண்மையுடன் நாட்டுக்கே புகழை சேர்ப்பர்

கறமின்றி...... பகையின்றி
நிமலமாலா .....மாசற்ற (தூய்மையான)
ஆலிவிலை ..... ஆலிவ் இலை
மண்டிலமாய் ........ வட்டமாய் ஓடுதல்
கேண்மை....... உறவு.....நட்பு


மூன்றாவதுஇடத்தைப்பெற்றுவின்கலைபட்டமும் ,சான்றிதழும்பெறுகின்றார்

                                                               மெய்யன் நடராஜ்

                                                         தலைப்பு.ஒலிம்பிக்

வீரர்தமை விலைக்கு வாங்கும்
வீரம் படைத்த வீராதி வீரர்கள்
வெற்றிவாகை சூடி வீறுநடை போட
வெறுங்கையோடு திரும்பிவந்த என்
வீரனே.. உனக்காக நான்
விரிக்கிறேன் வரவேற்புக் கம்பளம்
திறமைசாலிகளை தேடி எடுத்துத்
தகுந்த மரியாதை செய்யும்
திறமையில்லாத தேர்வாளர்களால்
தேசத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கலாம்
தங்கப்பதக்கம் .. ஆனால் நீயுன்
திறமையை காட்டித் தோற்றதில்
கிடைத்ததே தன்மானப் பதக்கம்
திறமைசாலிகளை விலைக்கு வாங்கும்
திறமைமிக்கத் தேசத்திற்கு
விலைபோகாத உன் திறமை அது
புடம் போடாதத் தங்கம்
திறமைமிக்க விளையாட்டு வீரர்களை
தேர்ந்தெடுக்கும் விளையாட்டில்
விளையாடப் பட்டிருக்கலாம்
உண்மையான விளையாட்டு வீரன்
ஒதுக்கப்படுகின்ற உண்மை வீரன்
மனம் வெறுக்கப்படுகிற வேளை
யாருடைய கற்பனையிலோ
செதுக்கப்பட்டவனாகி விடுவதால்
வீரத்தை விற்று வெற்றி கொள்கிறான்
வேறொரு தேசத்தின் விசுவாசியாய்..
இல்லாமைகளை சூடிக்கொள்கின்ற
ஏழைக்கு உற்சாகம் கொடுத்து
ஊக்கப்படுத்தும் ஒரு தேசத்தில்
உருவாகும் வீரன் ஒலிம்பிக்கில்
எழும்பிநின்று காக்கின்ற மானத்தில்
இருப்பது தேசத்தின் வரலாறு.
நேற்றைய கறைகள் நேற்றோடு மறையட்டும்
நாளைய ஒலிம்பிக் நடக்கும்
ஜப்பானில் இனி நிலம் நடுங்கட்டும்
அது நம்மவரின் வெற்றி
கொண்டாட்ட அதிர்வாய் !

ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த கவிதையாகத்  தெரிவு செய்யப்பட்டு  "கவினெழி " பட்டமும் ,,சான்றிதழும்பெறுகின்றார் 
                                           இராச கிருட்டினன்,தமிழ்நாடு. இந்தியா
                              தலைப்பு.ஒலிம்பிக்.எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
உலகந்தனில் உளபேர்களும் மிகவும்மனம் மகிழ
ஒலிம்பிக்கெனும் உயர்போட்டியை
உலகோர்நடத் திடுவார்.
பலவாம்மொழி, பலவாம்நிறம், பலவாமவர் உருவம்,
பலநாட்டினர் மனமொன்றியே
ஒருசேரவே இணைவார்.
பலவாமுடற் றிறம்போற்றிடும்
பலபோட்டிகள் பரிசாய்ப்
பதக்கம்பல உயர்தங்கமும்
ஒளிர்வெள்ளிவெண் கலத்தில்.
உலகத்துளோர் உயர்நட்பினை
வளர்க்கும்பெரு நிகழ்ச்சி;
உயர்வாய்றிறன் உடையோர்களும்
பெறுவார்பெரும் புகழே!
தனியாய்றிறன் தனைக்காட்டிடும்
பலபோட்டிகள் உளவாம்.
தடைதாண்டிடும் திறன்காட்டிடும்
சிலபோட்டிகள் உளவாம்.
அணியாய்ச்சிலர் இணைந்தாடிடும்
பலபோட்டிகள் உளவாம்.
அறிவோடுடற் றிறன்காட்டிடும்
பலபோட்டிகள் உளவாம்.
மணியாய்ப்பல மகளிர்களும்
மகிழ்ந்தேயிதில் இணைவார்.
வருங்காலமும் மதிக்கும்பல
பெரும்சாதனை நிகழும்.
மனிதர்குலம் மகிழ்ந்தேயிதைப்
பலகாலமும் புகழும்.
மருந்தாலுடற் றிறன்கூட்டினால்
தடையும்கிடைத் திடுமே.
(வேறு யாப்பில்)
ஓட்டங்கள், உயர்தாண்டல், நீளங்கள் தாண்டல்,
உண்டாம்பந் தாட்டங்கள், பளுதூக்கும் போட்டி,
நாட்டமுடன் மற்போரும், மட்டைப்பத் தாட்டம்,
நன்னீரில் படகோட்டல், நீச்சல்ப்போட் டியுமாம்.
வாட்டங்கள் இல்லாமல் பலபேர்கள் கூடி
' மகிழ்ந்தேதான் பங்கேற்போம் நட்புக்காய்' என்றக்
கோட்பாட்டை நிலைநாட்டும் ஒலிம்பிக்கை என்றும்
குறைவின்றி நடத்துவது மாந்தர்க்கு மழகே.
முன்னாலே கிரேக்கத்து நாட்டின்தீப் பந்தம்
முறையாகக் கொணர்ந்திட்டு தீக்குண்டம் ஏற்றி,
வண்ணங்கள் கண்டங்கள் ஐந்தினையே குறிக்கும்
வளையங்கள் கொண்டகொடி அழகாக ஏற்றி
பண்ணோடு பலநாட்டின் கீதங்கள் இசைத்துப்
பற்றுடனே எல்லோரும் உறுதிமொழி ஏற்க
நன்றாக நான்காண்டுக் கொருமுறையே நடக்கும்
நாமெல்லாம் மகிழ்கின்ற நற்போட்டி இதுவே
.
                                   பாராட்டைப்பெரும்  கவிதைகள் -03

                                              கவிஞர். கோவிந்தராஜன் பாலு

                                                                  தலைப்பு.ஒலிம்பிக்
உலகமே வியக்கும் போட்டி
உள்ளம் மகிழ்ந்து போட்டி.
உன்னால் முடியும் வீரா
உசேன் போல்ட் சூரா.
உடம்பை உரமாக்கும் போட்டி
உயிர் வளர்க்கும் போட்டி.
நூறு மீட்டர் ஓடினால்
நூறாண்டு வாழலாம்.
இருநூறு மீட்டர் ஓடினால்
இளமையாக இருக்கலாம்.
நானூறு மீட்டர் ஓடினால்
நலமாக வாழலாம்.
கைப்பந்து ஆடினால்
கரங்களை வலுப்படுத்தலாம்.
கால்பந்து ஆடினால்
காலால் எமனை உதைக்கலாம்.
கூடைப்பந்து ஆடினால்
குறிக்கோளாய் வாழலாம்.
நீச்சல் பயிற்சி செய்திட்டால்
நீண்ட ஆயுள் பெற்றிடலாம்.
குண்டு எறிந்து பழகினால்
குண்டாவதைத் தவிர்க்கலாம்.
விற்பயிற்சி செய்திட்டால்
வெற்றிகளைக் குவிக்கலாம்.
இறகுப் பந்து ஆடிடு
இறக்கைக் கட்டிப் பறந்திடு.
மேசைப் பந்து ஆடிடு
மேன்மையாக வாழ்ந்திடு.
மல்யுத்தம் பயின்றிடுக.
மன உறுதிப் பெற்றிடு.
உலகம் போற்றும் ஒருவிழா
ஒலிம்பிக் போட்டித் திருவிழா.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நலம் பயக்கும் திறன் விழா.
வேற்றுமைகள் மறையுதே
ஒற்றுமைகள் ஓங்குதே.


-                                          கவிஞர். கு. நா. கவின்முருகுதுபாய்                                                        தலைப்பு-ஒலிம்பிக்-02

எந்நாடும் போட்டியிடும் களமே ஈது
... ஏற்றங்கள் சேர்த்திடுமே செழிக்க நாடு
வந்தவரெல் லோருக்கும் போட்டி என்ப
... வையத்து திறனணைத்தும் திறந்து காட்ட
சொந்தநாடு வென்றதாக அறிக்கை வந்து
... சூடிடுமே வாகையென்பர் ஒருவன் வெல்ல
எந்தபோட்டி என்பதில்லை வெல்ல இங்கே
... இந்நாடே என்பரிங்கு பெயரும் சொல்லி
சிறப்புடனே பங்குபெற்று வென்று நிற்க
... சீறுடையான் பெருமைசேர்க்க களிக்கும் நாடு
பறந்திடுமே பட்டொளியும் வீசி வானில்
... பாரெங்கும் போற்றிடுமே வெற்றிச் சொல்லி
திறனணைத்தும் காட்டிடவே தளமாம் ஈது
... திரள்சேர்ந்த விளையாட்டே ஒலிபிக் என்பர்
சிறப்புசெய்ய நாட்டிற்கு வெற்றி ஒன்றே
... செம்மைசெய்யும் ஈன்றநாட்டை உயர்த்த விண்ணில்.
உற்றபெரும் பல்நாட்டு வீரர் தம்மின்
... ஒப்பில்லா திறமையினை காட்டி வெல்ல
ஏற்றமுடன் போட்டிகளை களத்தில் கண்டு
... ஏறுநடை போட்டிங்கே பதக்கம் வெல்ல
மாற்றமில்லை இனமொழியில் ஒன்றாய் சேர்ந்து
... மாளாத வெற்றிகளே இலக்காய் கொண்டு
தூற்றுஞ்சொல் வாராது கடிந்து ஆடி
... தூக்கிநிற்கும் பதக்கங்கள் மகிழ்ச்சி யாக்கும்
.
பன்னாட்டு கீதங்கள் ஓரி டத்தில்
... பாங்குடனே ஒலித்திடவே ஒருங்கி ணைந்த
நன்னாடாய் திகழுமெழில் பிரேசில் தன்னில்
... ஞாலத்தின் ஒற்றுமையை காணல் நன்றே
வன்மையற்றே வெற்றியொன்றே மனத்தில் வேண்டி
... வாஞ்சையுடன் கடினத்தை பாரா வீரர்
தன்னிறைவில் நாட்டிற்கும் பெருமை யானே
... சாதிக்கும் மனிதருக்கு நன்றே நாளும்
போட்டியொன்றே முதன்மையாகி ஆடும் ஆட்டம்
... பொல்லாப்பு இல்லாத சிறந்த ஆட்டம்
காட்டிடுவார் திறமையெல்லாம் ரியோ தன்னில்
... காட்டாற்று அடங்காத வீர மெல்லாம்
ஏட்டிக்கு போட்டியென எல்லாம் வெல்ல
... ஏற்றமுடன் திகழ்வாரே வென்ற யாரும்
நாட்டிற்காய் விளையாடும் நல்லோர் என்போம்
... நல்லபல வெற்றிகளே நாடும் ஈட்டும்
செம்மைசெய்ய வாய்ப்பாகும் நாட்டிற் கேதான்
... சீமையிலும் பறைச்சாற்றும் வாய்ப்பே யாகும்
எம்மையீன்ற மண்ணுமெங்கள் உயிரின் மேலாம்
... ஏற்றமுடன் திகழ்ந்திடவே செய்வோம் நாமும்
நம்பெருமை யாகுமினி காத்தல் நாட்டை
... நல்லபெயர் நல்கிடுவோம் வெற்று காட்டி
எம்பாட்டன் வாழ்ந்தநிலம் எனக்கும் நாடே
... இயன்றவரை காத்திடலே எனக்கு ஏற்றம்.
சொல்லற்க வெற்றிகளே குவிய வேண்டும்
... சோர்விலாது எந்நாடும் வெல்ல வேண்டும்
பொல்லாப்பு இல்லாத ஒற்று மையில்
... புத்துணர்வாய் ஒருமைபாடு வளர்தல் வேண்டும்
வல்லவனு முள்ளானே வையத் துள்ளே
... வாகையல்ல வீழ்ச்சியுமெ வெற்றி தானே
நல்லகுணம் நாடுபோற்ற ஒன்றாய் வாழ
... நலன்போணும் விளையாட்டே ஈது என்போம்
.
                          கே.என். இராமகிருஷ்ணன் (ராம்க்ருஷ்)

                                                           தலைப்பு-ஒலிம்பிக்-03
மலைமீதான விளையாட்டரங்கு தேவதை
தலையாய பொழுதுபோக்குக் கலைஞர்தமை
நிலையான உலகு முழுதிலிமிருந்து வரவேற்று
வலையாகப் போட்டிகள் நடத்திடும் பாங்கு சிறப்பு
ஏதன்சில் தொடங்கிய நவீனத்துவ ஒலிம்பிக்கில்
மேதகு வெற்றியாளர்க்கு தங்கம் வெள்ளி வெண்கலமென
சாதனைக் சிறப்புகளைத் தனிச் சிறப்பாக்கியதே
நாத வெள்ளமென தேசீய கீதங்கள் இசைத்ததும் சிறப்பே
நாடுகளின் ஒற்றுமையை வளர்த்திடும் நல்நோக்கம்
ஏடுகளில் பெருமையாய் பெரும்பேறு பெற்றது
ஈடு இணையிலா நட்பு வளர்த்தே நாளும் வளர்ந்தது
பாடுபட்டு மனித நேயம் வளர்த்து பெருமையடைந்தது
இட்லர் போன்ற கொடுங்கோன்மை ஆட்சியாளரும்
அட்டியில்லாது எதிரி யூதர்களை விளையாடவிட்டது
சுட்டியாக நல்லவன் முகமூடி அணியவும் வைத்தது
பட்டிதொட்டியெங்கும் பாராட்டாய் மிளிர்ந்ததே அது
பனிமழை,வெயில் சூறாவளி என இயற்கைச் சுழலிலும்
கனிவுமிகு அணையாத் தீபமாக ஒலிம்பிக் தீபம்
தனியொருவர் ஒருவராக ஏந்தி ஆள்மாற்றி ஓடியே
இனிமையான ஒலிம்பிக் அரங்கில் வைத்து ஓளியாகுதே
மாராத்தானெனும் ஊரிலிருந்து பான்எதனிக் அரங்குவரை
சோராது ஓடி நாற்பது கிலோமீட்டர் கடப்பது போட்டி
மாராத்தான் ஓட்டம் ஒரு புகழ்மிக்க ஓட்டமானதே
நேராகவே அது தொலைக் காட்சியிலும் காட்டப்படுகிறதே
ஒரு நூற்றாண்டுக் காலம் பெண் மாராத்தான் இல்லை
ஒரு ஆணாதிக்க மனப்பான்மை விலக நூறு ஆண்டுகளா
இருவேறு எண்ணங்களின்றி ஒலிம்பிக் நடைபெறுகிறது
இருக்கும் நாடுகள் தகுதியிருப்பின் பங்கு பெறலாமே
ஓடி விளையாடு பாப்பா என்று சொன்ன பாரதியார்
கூடி விளையாடு பாப்பா என்றும் சொல்லியுள்ளாரே
உயர்வு தாழ்ச்சி சொலல் பாவம் என்றும் சொன்னாரே
ஒலிம்பிக் பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுகிறதே
நீச்சல் வீரர் பெல்ப்ஸ் வென்றிட்ட ஒலிம்பிக் பதக்கங்கள்
கூச்சமில்லாது கொண்டாடப்பட வேண்டியதாகிறது
வீச்சில் வலிமை பெருக்க இந்தியா முயலவேண்டும்தான்
ஏச்சுக்களால் ஆவது ஒன்றில்லை முயற்சிதான் வழி
.

போட்டியில்மனநிறைவோடுபங்குபற்றியவர்களுக்கும்சான்றிதழ்பாராட்டுக்கள்பெ,ற்றவர்களுக்கும்தடாகத்தாமரைகளின்வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களு

 நன்றி 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் -தடாகம் காலை இலக்கிய வட்டம்
`No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.