புதியவை

கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதைத் தொகுதி வெளியீடு விழா -
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதைத் தொகுதி வெளியீடு விழா 18-09-2016  ஞாயிற்றுக்கிழமை
கல்முனை சாஹிரா கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தடாகம் கலை, இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில்
கவிஞர் நவாஸ் செளபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுத்தீன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் 
மட்டக்களப்பு சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையின் தலைவர் சமூக ஜோதி புரவலர்.தடாகத்தின் விழா குழு   இணைப்பாளர் ; 
அல்ஹாஜ் மீராசாஹிப் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஒளிபரப்பாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி சிறப்புரையையும்
எழுத்தாளர்எ ஸ்.எல்.மன்சூர்,அவர்களின் அருமையான உறையும் 
 ஜெஸ்மி எம்.மூஸா அவர்களின் நூலாலாய்வுரையும்
 கலைமகள் ஹிதாயா றிஸ்வி வாழ்த்துரையையும்
 கவிஞர் வில்லூரான் அவர்களின் கவி வாழ்த்தும்
 நூலாசிரியரின் புதல்வர் ஏ.அஹமத் ஆரிப்அவர்களின்  நன்றியுரையும்இடம்பெற்றது  
இதன்போது நூலாசிரியர் டாக்டர் நாகூர் ஆரிப், சாய்ந்தமருது நலன்புரி அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம்,
 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத்
சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா தலைவர் யூ.எல்.எம்.காசிம் மௌலவி 
மற்றும் பல கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள்.குடும்பத்துஉறவினர்   என பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை இந்நூல் ஊடாக கிடைக்கும் நிதியை சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது 
தடாகத்தின் அழைப்பை ஏற்று மனநிறைவோடு வருகை தந்து சிறப்பித்த  அன்பான உள்ளங்கள்  அனைவருக்கும் எங்களது மன நிறைவான நன்றிகள்
                                  
                 

                                   
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.