புதியவை

அகத்தில் கொண்டு வாழு-( எம் .ஜெயராமசர்மா..மெல்பேண் அவுஸ்திரேலியா )

அகத்தில் கொண்டு வாழு !
  
                          ( எம் . ஜெயராமசர்மா.. மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) 
  
     நாடுபோற்ற வாழு 
     நன்மைநினைத்து வாழு
     ஊடலொழித்து வாழு
     உண்மையோடு வாழு 
     வாழவேண்டும் எண்ணம்
     மனதில்கொண்டு வாழு 
     மனம்முழுக்கத் தூய்மை
     நிறைத்துக்கொண்டு வாழு !

     அன்னைதந்தை உந்தன்
     அகத்தில்கொண்டு வாழு
     அறிவைநல்கும் ஆசான்
     ஆசீபெற்று வாழு 
     உன்னைவிரும்பும் வண்ணம்
     உயர்ந்துநிற்கும் பெரியோர்
     உன்னைவாழ்த்தி நிற்க 
     உளத்தாலுயர்ந்து வாழு !

    கற்றவற்றை நாளும்
    கருத்தில்கொண்டு வாழு
    கற்கும்நூல்கள் தன்னை
    கவனங்கொண்டு பாரு
    கஞ்சிகுடிக்கும் வாழ்வு
    வந்தமையும் போதும்
    கற்கும்நிலைய நாளும்
    கடமையாக்கி வாழு !

    உண்மையுந்தன் வாழ்வில்
    உயர்வுஎன்று வாழு
    உலகுபழிக்கும் யாவும்
    உதறிவிட்டு வாழு 
    அன்புதன்னை உந்தன்
    அறமாய்கொண்டு வாழு 
     அரவணைக்கும் பாங்கை
     அகத்தில்கொண்டு வாழு !

     தெய்வமுண்டு என்று
     தினமுமெண்ணி வாழு
     பொய்மையுந்தன் வாழ்வை
     பொசுக்குமென்று வாழு
     கோபம்கொண்டு வாழ்ந்தால் 
     குணமிழந்து போவாய்
     ஆதலாலே நீயும்
     அகிம்சையேற்று வாழு !

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.