புதியவை

தன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன் சாதனை!

இன்று கொழும்பில் தேசியகண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியும் போட்டியும்!

தன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன்                                             சாதனை! மனோபவன்

(காரைதீவு நிருபர் சகா)
திருக்கோவில் வலயத்தின் தம்பிலுவில் தேசிய கல்லூரியின் மாணவன் கனகலிங்கம் மனோபவன் புதியகண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து தேசியகண்காட்சி மற்றும் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
'சஹசக் நிமெவும்' என்ற புதியகண்டுபிடிப்பகளுக்கான தேசியகண்காட்சிக்காக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளான்.
இக்கண்காட்சியும் போட்டியும் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்.இல் இன்று 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தன்னியக்கதொலைபேசி மின்னேற்றி தன்னியக்க விவசாய நீர்விசிறி தன்னியக்க தரைஉலர்த்தி தன்னியக்க விதைநடுகருவி என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளதன்மூலம் இப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளான்.
18வயதுடைய மனோபவன் சிறுவயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் அதிக ஈடுபாடுகாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.th 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.