கவியரசர் கவி நினைந்து
காதலுடன் விழா எடுப்போம்
புவிமுழுதும் அவர் கவிதை
புது ரத்தம் பாய்ச்சியதே !
கவிமழையைப் பொழிந்து நின்ற
கார்மேகம் கவி அரசர்
அவர் புகழைப் பாடுவதே
அனை வருக்கும் ஆனந்தம்
கார்மேகம் கவி அரசர்
அவர் புகழைப் பாடுவதே
அனை வருக்கும் ஆனந்தம்
செவிநுகரக் கவி தந்த
கவி அரசர் அவரன்றோ
உயிர் மூச்சாய் அவர்கவிதை
உயர்ந் தோங்கி நிற்கிறதே
கவி அரசர் அவரன்றோ
உயிர் மூச்சாய் அவர்கவிதை
உயர்ந் தோங்கி நிற்கிறதே
அயராமல் அவர் எழுதி
அனைவருக்கும் கவி தந்தார்
ஆதலால் அவர் பணிக்கு
காதலுடன் விழா எடுப்போம்
அனைவருக்கும் கவி தந்தார்
ஆதலால் அவர் பணிக்கு
காதலுடன் விழா எடுப்போம்
கம்பன் விழா எடுப்பதுபோல்
கண்ணதாசன் விழா எடுப்போம்
கவி கண்ணதாசனை நாம்
கால மெலாம் போற்றிநிற்போம்
கண்ணதாசன் விழா எடுப்போம்
கவி கண்ணதாசனை நாம்
கால மெலாம் போற்றிநிற்போம்
உம்பரெலாம் போற்றி நிற்க
உவப்புடனே விழா எடுப்போம்
செந்தமிழால் கவி தந்தார்
சிறந்திட நாம் விழாவெடுப்போம் !
உவப்புடனே விழா எடுப்போம்
செந்தமிழால் கவி தந்தார்
சிறந்திட நாம் விழாவெடுப்போம் !
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.