புதியவை

அட்டாளைச்சேனை கிழக்கு வீதி நல்லாட்சியின் அபிவிருத்தியிலும் புறக்கணிக்கப்பட்டதா..? எஸ்.என்.எஸ்.றிஸ்லி-

அட்டாளைச்சேனை கிழக்கு வீதி நல்லாட்சியின் அபிவிருத்தியிலும் புறக்கணிக்கப்பட்டதா..?

                                                 எஸ்.என்.எஸ்.றிஸ்லி-தைக்காநகர், அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவில் உள்ள கிழக்கு வீதியானது பல வருடங்களாக அபிவிருத்தி எதுவும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் மணல் வீதியாக இருந்த குறித்த வீதியானது கெறவள் வீதியாக மாற்றப்பட்டது. சரியான முறையில் அது அபிவிருத்தி செய்யப்படாமையினால் காலப்போக்கில் பள்ளமும் படுகுளியுமாக மாறியது. 

அது தொடர்பில் மக்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பலன் இல்லாமையினால் கற்களும், களிமண்ணும் கொண்டு பள்ளங்களை நிரப்பினர். எப்படி நிரப்பினாலும் காலப்போக்கில் மீண்டும் அவ்வீதி பழைய நிலைக்கே தள்ளப்பட்டு விடுகின்றது. இதனால் மழைக்காலங்களில் அவ்வீதியில் வெள்ள நீர் தேங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வீதியானது சரியான முறையில் அபிவிருத்தி செய்யப்படாமையினால் அவ்வீதியில் காணப்படும் வீடுகள் பள்ளமாகவும் வீதி உயரமாகவும் காணப்படுகின்றது. இதான் வளவுகளுக்குள் தேங்கி நிக்கும் வெள்ளநீரானது வடிந்து ஓட வழியில்லாமல் வளவுகளுக்குள்ளேயே நின்று வற்ற வேண்டிய நிலை காணப்படுகின்றது. 

மழைக்காலங்களில் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் பல அசவ்கரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் மழைக்காலங்களில் வீதியில் மீன்கள் ஓடுவதையும் அவதானிக்க முடியும். வருடா வரும் வருவார்கள் அளப்பார்கள் ஆனால் எதுவுமே நடப்பதில்லை எனவும் குறித்த இந்த கிழக்குவீதியானது நல்லாட்சியின் அபிவிருத்தியிலாவது கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி காணுமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.