புதியவை

இரவு தேவதை - இரா சத்திக்கண்ணன்அந்தி சாயும் நேரம்
வண்ணங்கள் வழி 
நாணத்துடன் 
பவனி வருகிறாள்

தன் வெளிச்ச உதடுகளை 
மூடியபடி 
மௌனமாய் வருகிறாள்

கறுப்பழகியவள் 
பிறை சூடியன்றோ 
கிரங்கடிக்கிறாள்

வெளிச்ச வரங்கள்
தந்து 
வசியம் செய்கிறாள் 

நட்சத்திரக் கவிச்சுடரில் 
தீயாய் 
ஜொலிக்கிறாள் 

வெண் நுரைகளை
கால்களில் அணிந்து
நர்த்தனமாடுகிறாள் 
கடலலைகளில் 

அவளின் 
தழுவல்களில் 
பூமி அழகாகிறது

அதிகாலைப் 
பனித்துளிகளில்
வண்ணமாய் மிளிர்கிறாள் 

இதயத்தில் நிறைகிறாள் 
இரவு தேவதை!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.