புதியவை

கவியருவி முனைவர் ம.ரமேஷ் ஹைக்கூக்கள்

கவியருவி முனைவர் ம.ரமேஷ் ஹைக்கூக்கள்பொறுத்துப் பொறுத்துப் பார்த்து
கல் எரியும் விவசாயி…
பறக்கும் ஒருகும்பல் பறவைகள்
நம்பி எழுந்து செல்கிறார்
குறிசொல்லி முடிந்தது திருநீறு பூசியவர்
சாராயம் குடிக்க ஆரம்பிக்கிறார்

பூத்து நிற்கும் கள்ளிச் செடி
செல்லமாய்த் தடவிச் செல்கிறாள்
இடுப்பில் குழந்தை

தாய் தந்தை சமாதிமேல்
உறங்கும் விவசாயி
புன்னை நிழல்

திருஷ்டி பொம்மையை எரிக்க
வெறித்துப் பார்க்கிறது...
வயக்காட்டு பொம்மை

மெத்தை வீடு கட்டிய
நிம்மதி; உறங்குகிறார்
மாட்டுத் கொட்டகையில்…

பச்சை மண்
கையில் கொட்டாங்குச்சி
தரையில் ஐந்தாறு இட்லி

இரண்டில் ஒன்று
காணாமல் போயிருந்தது…
ரோஜாப் பதியன்கள்

சிலவற்றை இழந்தேன்
ஊரில் உயர்வாய்ப்பேசுகின்றனர்…
வெளிநாட்டு வேலை

இறுதி ஊர்வலத்தின் சாமந்தி
இதழ்களை கவனித்தவாறே…
கணவனை இழந்தவள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.