புதியவை

.கலைமாமணி ஆர் எஸ் மணியம்"பாடும் நிலா" என்று மலேசிய கலை உலகில் எல்லோராலும்.. பாராட்டப்பட்ட . .கலைமாமணி ஆர் எஸ் மணியம்.

நேற்று அதிகலை நடந்த விபத்து ஒன்றில் காலமானார்.

. 59 வயதாகும் ஆர் எஸ் மணியத்திற்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்

.
பேராக் மாநிலத்தில்.சுங்கையில் பிறந்தவரான இவர்.

6 சகோதரர் 2 சகோதரிகள்.உடன் பிறந்தவர் இவர் 5 வது.பிள்ளை படித்தது தமிழ் பள்ளி மட்டுமே.

பள்ளிப்பருவம் முதலே.. இசைத்துறையில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.

இசை ஆர்வம். நல்ல குரல் வளம்.இசை பயிற்சி பயின்று, பின் சொந்தமாகவே பயிற்சி செய்து வந்தார். இன்று வரை அதி காலையில் இசை பயிற்சி செய்து விட்டு தான் அவரது தொழிலுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டவர் .


திரைப்பாடகர் எஸ் .பி பாலாவை போலவே இவர் பாடல்கள் பாடி நாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
. பல வருடங்களாக உள்நாட்டுப் பாடல்களை வானொலியிலும்.. தொலைக்காட்சியிலும் பாடி வந்துள்ளார்..
பல உள்நாட்டு குறுந்தட்டு களிலும் இவர் பாடியிருக்கிறார்.

இவருடைய அண்ணன்.. தன்முனைப்பு பேச்சாளர் திரு ரெகோ ராசு எழுதி வெளியீடு செய்த இதய கீதமே, தந்தைப்பெரியார்..கே லின்க் தன்னம்பிக்கைப் பாடல்கள்..என்ற குறுந்தட்டு களில் உள்ள எல்லாப் பாடல்களையும் பாடி இவர் பெரும் புகழ் பெற்றார்..

மலேசியா சிங்கப்பூர்.. மொரிசியசு நாடுகளில் இவர் கலை நிகழ்சிகளில் பங்கு கொண்டு பாடி இருக்கிறார்..கலைமாமணி என்ற விருதையும் அன்மையில் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

தந்தையைப் பிரிந்த இவர் ,தாயார் 93 வயது முனியம்மா இவர்களுடன் வாழ்ந்து வருகின்றார்

இவர்கள் யாவரும் தந்தை பெரியார் வழி.
இன்று பிற்பகல் மணி 12.00 க்கு.. எண் 2A jalan BK 4/4 Bandaar Kinnaara 47000.பூச்சோங் என்ற முகவரியில் ,


மனித நேய திராவிடர் கழக ஆலோசகர் மானமிகு ரெ.சு.முத்தையா தலைமையில்நல்லடக்க நிகழ்வுகள் நடைபெற்று..

பூச்சோங் 14 வது கல்லில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும்.

எமது தடாகம் குடும்பத்தின் மலேசிய உற்ற உறவான எழுத்தாளர் சகோதரி மல்லிகா கன்னன் அவர்களது மைத்துனர் (கணவரின் உடன்பிறப்பு )என்பது குறிப்பிடத்தக்கது

மலேசியக் கலைவானத்தில் பாடும் நிலாவாக உலாவந்த அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஓன்றாகும்.எனதும் எனது குடும்பத்தாரதும்.தடாகம் கலைஇலக்கிய வட்டத்தினதும் ஆழ்ந்த துக்கத்தை தெரிவிப்பதோடு   அன்னாரது ஆத்மா அமைதியாய் அறிதுயில் கொள்ள எல்லாம் வல்ல எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம் 

தொடர்புக்கு

ரெ.கோ.0163113016..
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.