புதியவை

நினைக்கவேண்டும்! ( எம்.ஜெயராமசர்மா மெல்பேண்-அவுஸ்திரேலியா )

                   நினைக்கவேண்டும்!

                                        எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்---- அவுஸ்திரேலியா )

   நாளுமே நோன்பிருந்து நல்லதையே நினைத்து நல்ல பிள்ளை வேண்டுமென்று
நற்றவம் செய்தவளே நாம்வாழ நினைக்கின்ற நம் அன்னை.நாம் அழுதாள் அவள்
அழுவாள். நாம் சிரித்தாள் அவள் மகிழ்வாள்.அன்னையின் மனம் மகிழ்ந்தால் அது
அனைவர்க்கும் பெருவரம்தான். அன்னையை அழவைத்தால் அவதி அவளுக்கல்ல
அவளை அழவிட்டவர்க்குத்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
   ஒவ்வொரு அன்னையும் தனது பிள்ளை உயர்வு பெற்று வருவதையே அனுதினமும்
நினைத்தபடி இருப்பாள். தான் வாழா விட்டாலும் தன்பிள்ளை பெருவாழ்வு காண
வேண்டும் என்பதே அவள் ஆசையாக இருக்கும். எப்பாடு பட்டாவது பிள்ளைகளை
முன்னுக்குக் கொண்டுவருவதிலே அன்னையரின் பங்கு அளப்பரியது எனலாம்.
    ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பதாகச் சொல்
லுவது வழக்கம் .அது வேறு யாருமல்ல அன்னையேதான்.
     எமது தமிழ் மரபுப்படி எதற்கெடுத்தாலும் அன்னையையே முதலில் வைப்பது
வழக்கமாகிவிட்டது.ஏனென்றால் எங்களின் கண்கண்ட தெய்வமாக இருப்பவள்
அன்னைதானே. " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்பதில் கூட அன்னை
தானே முதலில் வைக்கப்படுகிறாள். 
     மொழியை தாய்மொழி என்கின்றோம்.நாட்டை தாய்நாடு என்கின்றோம்.ஆண்ட
வனை விழிக்கின்ற போதுகூட " அம்மையே அப்பா ஒப்பிலாமணியே" என அன்னை
யையே முன்னிலைப் படுத்துகின்றோம்.
       அன்னை என்னும் பொழுது அதில்..... அன்பு ,பாசம்நேசம்,கருணைவிட்டுக்
கொடுப்புபொறுமைகளிவிரக்கம்தன்னை ஒறுத்தல்,மற்றவர்க்காய் உழைத்தல்
---- இவை அத்தனையும் இதில் பொதிந்து உள்ளது என்பதை யாரும் மறந்துவிடா தீர்கள்.
     கருவில் பிள்ளை உருவான நாள்முதல் தன்னை அவள் மறந்து விடுவாள். தன்னுள்
இருக்கின்ற கருவளர்ந்து வரவேண்டி அவளின் அத்தனை செயல்களும் அமைந்து
காணப்படும்.தனது விருப்பு வெறுப்பு அத்தனையும் அவள் ஒரு பக்கத்தில் ஒதுக்கியே 
வைத்துவிடுவாள்.ஊணை மறப்பாள்.உறக்கத்தை மறப்பாள்.ஏன் -- இந்த உலகமே 
அவள் நினைவில் வரமாட்டது. நல்ல படி குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் 
என்பதிலேயே அவளின் முழு எண்ணமும் இருக்கும்.
      குழந்தை பிறந்துவிட்டாலோ அவளின் குதூகலத்துக்கு ஈடே கிடையாது. உலகமே
தன்னிடத்தில் வந்தது போன்ற நினைப்பே அவளிடத்து வந்துவிடும்.உறைப்பைஉப்பை,
காரத்தைஎண்ணெயைஏன்... தான் இதுவரை விருப்பத்தோடு சுவைத்து வந்த உணவு
களையெல்லாம் குழந்தையின் சுகத்தை எண்ணி ஒதுக்கி விடுவாள்.தான் விரும்பியதை
ச்சாப்பிட்டு குழந்தைக்குப் பால்கொடுத்தால் அதனால் குழந்தை பாதிக்கப்படலாம் என
எண்ணி யாவற்றையும் விட்டு விட்டு குழந்தையின் நலம் ஒன்றையே மனத்திற் கொண்டு
தனது உணவுகளையே மாற்றுபவள்தான் ஒரு அன்னை.
      குழந்தை அழுதால் -- அதன் அழுகையைக் கொண்டு... பசிக்கு அழுகிறதாஅல்லது
வயிறு நொந்து அழுகிறதா அல்லது ஏதாவது பூச்சிகடித்து அழுகிறதாஎன்பதை அறி
யும் ஆற்றலைப் பெற்றவள் அன்னைதான்.குழந்தையின் ஒவ்வொரு அசைவும் அவளின்
மனதில் பதிந்தே இருக்கும்.அன்னைதான் குழந்தையின் முதல் வைத்தியர்.அவளின் பால்
தான் அக்குழந்தைக்கு அருமருந்து.
        ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் நடவடிக்கைகளை கவனித்து அதற்குத்தக்க
படி நடவடிக்கை மேற்கொள்பவள்தான் அன்னை என்பவள்.
          பிள்ளை வளர்ந்தாலும் அவளுக்கு அவனோ அவளோ தன்மடிமீது இருந்த பிள்ளை
யாகவேதான் எண்ணம் இருக்கும். ஆனால் பிள்ளைகளோ மாறியும் விடுவார்கள். 
இதனால்த்தான் பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு" என்றார்களோ என நினைக்க
த்தோன்றுகின்றது. பெற்றவள் பிள்ளைகளை எண்ணியபடியே இருப்பாள்.பிள்ளைகளோ
வேறு எல்லாவற்றையும் எண்ணியபடியே இருப்பார்கல்.இதுதான் காலத்தின் கோலம்
என்பதாஅல்லது கலியுகத்தின் நிலைமை என்பதா
        அன்னையரை மறக்கின்ற காரணத்தால்த்தானோ அன்னையர் தினம் என்னும் நிலை
வந்ததோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.அன்னிய நாடுகளில் பெற்றவரை வயது
வந்து விட்டால் வயோதிபர் நிலையங்களில் கொண்டுவிடுவது சாதாரண ஒன்றாகிவிட்டது.
அதனை எம்மவரும் பார்த்து அதன் வழியில் தாங்களும் நடந்தால் என்ன என்று எண்ணத்
தொடங்கியதோடல்லாமல் அவர்களுமே செயற்பட ஆரம்பித்துவிட்டனர்.
        பெற்று வளர்த்து பேணிக்காத்தவளை நாளும் பொழுதும் நாம்தானே காப்பாற்ற வேண்
டும். அவளை ஆரோ போல் நடத்துவது முறையாகுமாஅப்படி நடத்துவதோ நடத்த நினைப்
பதோ நன்றி மறந்த செயலாகும்.
        நாரதர் மாங்கனி கொடுத்த கதையில் ---" யார் முதல் உலகத்தைச் சுற்றி வருகிறாரோ
அவருக்கே மாங்கனி " எனச் சொல்லவே ... விநாயகப்பெருமான் அம்மை அப்பனை சுற்றி
வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்கின்றார்.இது கதையாக இருந்தாலும் அன்னை தந்தை
இருவரும்தான் உலகம் என்னும் அருமையான தத்துவம் யாவருக்கும் உணர்த்தப் படுகிற
தல்லவா
       எனவே அன்னை என்பவள்தான் எமக்கு எல்லாமாக இருக்கிறாள் அவளை மகிழ்ச்சியில்
ஆழ்த்தாவிடினும் அவள் மனம் நோகும்படி செய்வது மட்டும் பொருந்தாத செயலாகும்.
       அன்னையர் தினம் என்பது தைப்பொங்கல் வருஷப்பிறப்பு ,தீபாவளி மாதிரி அல்ல.
அவை கொண்டாட்டங்கள்.அன்னை என்பவள் ஆராதிக்கப்படவேண்டியவள்.அவளை
ஏற்ற வேண்டும்.போற்ற வேண்டும்.அவளைப் பூசிக்க வேண்டும். அதனை நாளும் பொழுதும்
செய்வதுதான் உண்மையான அன்னையர் தினமாகும்.கேக்கை வெட்டி பாட்டுக்களைப்பாடி
ஒரு உடுப்பை வாங்கிக் கொடுப்பது அல்ல அன்னையர் தினம். 
       பெற்றவளின் மனம் மகிழ தினமும் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெறு
வதுதான் அன்னையர்தினமாக இருக்கும்.
             "அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
             அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை 
              மண்ணில் மனிதரில்லை "

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.