புதியவை

அரும்புகள் இறைவனன்றோஎம் .ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா

அரும்புகள் இறைவனன்றோ !
           ( எம் .ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரே
அரும்புகள் அணைத்து நின்றால்
ஆனந்த நிலையில் நிற்போம்
நரம்பெலாம் உணர்வு பெற்று
நாம்வேறு உலகம் செல்வோம்
கவலையோ டிருக்கும் வேளை
கைகளால் எம்மைத் தீண்டி
அவலாம் நிலையைப் போக்க
அரும்புகள் துணையாய் நிற்பார்
அரும்புகள் இல்லா வீட்டை
ஆருமே விரும்ப மாட்டார்
மருந்துகள் தீர்க்கா நோயை
அரும்புகள் என்றும் தீர்ப்பார்
அரும்புகள் பேசும் வார்த்தை
அமுதத்தை ஒக்கும் என்பார்
விரும்பிநாம் கேட்டு நின்றால்
வேதனை பறந்தே போகும்
குறும்புகள் செய்யும் வேளை
குதூகலம் நிறைந்தே நிற்கும்
அரும்புகள் நிறைந்த வீடு
ஆலயம் ஆகி நிற்கும்
மரங்களில் அரும்பு கண்டால்
மாமலர் மலரும் என்போம்
மனைகளில் அரும்பு காணின்
மனமெலாம் நிறைந்தே போகும்
அரும்புகள் எங்கள் வாழ்வின்
பெரும் பொருள் ஆகியுள்ளார்
அரும்புகள் இல்லா வாழ்க்கை
ஆருக்கும் சுவைக்க மாட்டா
அரும்புகள் அருகில் வந்து
ஆண்டவன் அணைந்து நிற்பான்
ஆதலால் எங்கள் வாழ்வில்
அரும்புகள் இறைவன் அன்றோ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.