புதியவை

மட்டுநகர் கமல்தாஸ

முதலைக்குடா -மேற்கு நிரந்தர முகவரியாக கொண்ட அற்புதராசா -கமலதாஸ் ஆகிய நான்மட்டுநகர் கமல்தாஸ் எனும் புனைபெயரில் கவிதை எழுதி வருகின்றேன்  முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கா.பொ சாதரணதரம் வரை கல்வி கற்று நாட்டில் நிகழ்ந்த அசாதாரண காரணமாக படிப்பை நிறுத்தியிருந்தேன் ,மொழி மீது கொண்ட பற்று காரணமாவும் ,வாசிப்பின் ஊடாக 2005ம் ஆண்டு இருந்து பாத்திரிகைகள் வானொலிகள்  கவிதைகள் அனுப்பியிருந்தேன் இதன் பயனாக 2008ம் ஆண்டு வீரகேசரி வாரமலரில் ‘’அகதியின் புலம்பல் ‘’எனும் கவிதையும் அத்தோடு தொடர்ச்சியாக 
‘’நம்பிடாத நாயகி ‘’
‘’உலகமே உச்சரித்துப்பாருங்கள் ‘’,
‘’மண்ணுக்கு இரை இளையோர் அல்ல ‘’
‘’சிகரட் ‘’
‘’செயற்கை அழிவு எதற்குமானிடா ?’’
“இடையில் பார்வையற்ற இளைஞனின் புலம்பல் “
போன்றனவும் மலேசியா நாட்டில் வெளியாகும் மன்னன் இதழ் 
“ஆசையடி “
“காதலித்துப்பார் “
எனும் கவிதைகளும் இதே போன்று இந்தியாவில் வெளிவரும் பாக்யா இதழிலும் முன்று கவிதைகள் வெளிவந்துள்ளன 
                              இந்தியாவில் முப்பத்தியாறு கவிஞர்கள் கலந்து சிறப்பித்த “கவியாட்படை என்ற நூலில் “கலகம் செய்தவர்கள் “எனும் கவிதையும் இடபெற்றுது இதற்கு இந்தியா திரைப்பட பாடலாசிரியார் பிரியன் அவர்களினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது பாடலாசிரியருக்கான தகுதியும் பெற்றிருந்தேன் 
                                மேலும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம்  கலாச்சார பேரவையால் 2014 ம் ஆண்டு வெளியிட்ட சுயம்பு -03  மலரில் “நந்தவனத்தேரு “எனும் கவிதையும் வெளிவந்துள்ளதுஅதே போன்று பட்டிபளை பிரதேச கலை இலக்கிய சமுக ஒன்றித்தால் 2015ம் வெளியிடப்பட்ட முகவரி -03எனும் மலரிலும் “எங்கள் மன்னில “எனும் கவிதையும் வெளிவந்துள்ளது 
                                உலக பாவலர் மன்றம் நடத்திய கவிதைப்போட்டியில் “வாழ வைத்த தெய்வங்கள் “எனும் கவிதை ஆறுதல் பருசும் கிடைத்தது .
            ஏகதந்தன் இந்து இளைஞர் மன்றம் வெளியீடு செய்த ஒலிப்பேழையில் எனது வரியில் உருவான பாடல் இடபெற்றது .
                            எனது புரட்டப்படாத பக்கங்கள் எனும் கவிதைத் தொகுப்பு பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமுக அபிவிருத்தி ஒன்றியத்தால் எதிர் வரும்   31/07/2016ஆம் திகதி வெளியீடு செய்யப்படவுள்ளது .
கவிதைகளோடு மட்டும் நின்று விடாது கட்டுரைகள், சிறுகதைகள் ,பாரம்பரியம் சார்ந்த கூத்து வசந்தன் நட்டார் பாடல்கள்  போன்ற துறைகளிலும் ஆர்வங்கள் உள்ளது 

முதிர் கன்னியின் கண்ணீர் மட்டுநகர் கமல்தாஸ்

உதித்த நாள் முதல்
எதிருரை பேசாது  என்பதமாயிருந்தேன் 
எதிர் மலராய் வண்டாறியாதிருந்தேன்


எதிர் மொழி கொட்டாது 
எவர் வாய் பேச்சும் கேளாது 
எதிர் வினையை எதிர் பார்த்திருந்தேன் 
மதி வட்ட அழகாய் 
மானுடர் மயங்கா வண்ணம் 
மனத்தினும் மமதை இல்லாதிருந்தேன் 
முள்ளில்லா நாவில் 
மூச்சி நிற்காது  ஓதுவர் எங்கே வாழ்வாரோ !

கல்லெறிந்தாலும் கலையாத தேன்கூண்டில்
சொல்லெறிந்து சிதத்த 
சிசுபாலர்கள் எங்கே சிதைந்தாரோ!

கதிறேரிந்து அறுபடைக்கு காத்திருந்த வயல் 
மண்ணோடு  மடிந்து போனது போல 
கனவோடு காத்திருந்த கற்புடையாளை
காலத்தில் செய்யப்பயிரென கழித்து விட்டதே பெருங்கூட்டம் 
எத்தாப்பு விலக எட்டிப்பார்தோரெல்லாம் 
ஏதுமாறியார் போல் விளகிப்போனார்களே 
மல்லிகைக் கொடியில் கொல்லி வைக்க 
எண்ணியோர் எவ்விடம் போனாரோ !
என் கண்ணீர் சாபச்சுமையை எங்கோ இறக்கி வைத்தாரோ!  
அவ்விடம் என்ன பதில் சொன்னாரோ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.