புதியவை

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய நூலுக்கு குழந்தை இலக்கிய பரிசு

         
          
       .
 வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ’கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ கிடைத்துள்ளது.
         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது

          2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா செப்டம்பர் 25 அன்று தேனியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் கே.வேலாயுதம் தலைமையேற்றார். மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         தேனி மாவட்டத் தலைவரும் எழுத்தாளருமான தேனிசீருடையான் அனைவரையும் வரவேற்றார். 

          2015-ஆம் ஆண்டு வெளியான சிறந்த குழந்தை இலக்கிய நூலாக கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும்’ எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு கேடயமும் ரூ.ஐந்தாயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
            தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன், பொருளாளர் சு.இராமச்சந்திரன் ஆகியோர் பரிசினை வழங்கினர். நூலைத் திறனாய்வு செய்து வழக்கறிஞரும் எழுத்தாளருமான மு.ஆனந்தன் உரையாற்றினார்.
              தேனி கிளைச் செயலாளர் இதயநிலவன் நன்றி கூறினார்.



தமுஎகச-வின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும்’ எனும் நூலுக்கு தேனியில் நடைபெற்ற விழாவில், கேடயமும் ரூ.ஐந்தாயிரம் பரிசுத்தொகையையும் தமுஎகச மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன், பொருளாளர் சு.இராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். அருகில், மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி உள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.