புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 செப்டெம்பர் மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்பெறுகின்றார் ச. றஹ்மதுல்லாஹ் சம்மாந்துறை -
உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு.-

சும்மாயிரு இரு கொஞ்சம்....
எவரைப்பற்றியோ உரக்கப் பேசுகிறார்கள்....
காதுகளைத் தாழ்த்திக்கொள்... கண்களால் உற்றுநோக்கு யாரோ எம்மை நெருங்குகிறார்கள்
ஏதோ பேசுகிறார்கள்
கலி கொண்ட பூமியில் ஜடமாகிப் போன மனிதம் பற்றிக் கேட்போம்.....
கொஞ்சம் சும்மாயிரு. ....
காதுகளில் ஒலி விழவில்லை....
கொஞ்சம் பொறு அருகில் சென்று பார்ப்போம். ....
பயமாகவும் இருக்கிறது
கொடூரம் நிறைந்த மனிதர்களுடன் ஒன்றித்து நிற்பதற்கு.....
எம்மையும் அடித்துக் கொன்று விடுவார்கள்....
அல்லது குழியில் போட்டு துப்பாக்கிகளால் உடலில் ஓவியம் வரைந்திடுவார்கள்...
பயமாக இருக்கிறது....
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ....
எவனோ அப்பாவியான ஒருவனை வீழ்த்தி-
சாதனை செய்யப்போகிறார்கள்.....
மனிதம் செத்துப்போன மானிட உலகம் இது
நீ கொஞ்சம் சும்மாயிரு. ....
ஆலோசனைகள் நமக்கேன்....
இயற்கையோடு பரந்த-
நம்மேனியில் இருந்தே திட்டம் தீட்டப்படுகிறது. ....
உலக அற்பப்பொருளுக்காக கூடப்பிறந்தவனையே கொல்லும் உலகம் ....
கல் நெஞ்சமாய் இருந்து- எம்மைக் கல்லென்று அழைக்கின்றனர்......
சிறுபிள்ளையில் காமம் கொள்ளும் ஈனப்பிறவிகள் இவர்கள்.....
இவர்களுக்குப் புத்திமதி எதற்கு.....
நீ சும்மாயிரு -உருவம் .... கல்லானாலும் நெஞ்சம்
பூமலராகவே இருக்கிறது....
மோசடிசெய்யும் மனித குலம்
வேசம் போடும் ஆறவு ஜீவன்
இவர்கள்....
எம்மால் என்ன செய்ய முடியும்....
சும்மாயிருப்பவனே பழி சுமக்கிறான்.....
காதுகளைத்திறந்து விடு
கண்களை மறைத்துக்கொள்....
நாமும் சும்மாயிருந்துவிடுவோம்....
வீண்பழி நமக்கேன்..

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.