புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 செப்டெம்பர் மாதம் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதல் ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு கவியருவி பட்டமும் ,சான்றிதழும்பெறுகின்றார் கவிஞர் பாலு கோவிந்தராஜன்உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி செப்டெம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் -82
தலைப்பு -சும்மாயிரு.

சும்மா இருத்தல் சுகமென்றால்
சுற்றும் பூமி சுற்றாதே.!
சிம்மா சனமும் கிடைக்காதே
சிரமம் சுமைகள் என்றாலே.!

பொம்மை இல்லை மனிதரெல்லாம்
பொறுப்பாய் வாழ முனைந்திடுவோம்.!
செம்மை யாக உழைத்திட்டால்
சிறப்பாய் வாழ்க்கை அமைந்திடுமே.!

தினமும் மனதில் எண்ணங்கள்
தீமை யகற்றிப் போற்றிடுங்கள்.!
மனமும் மலராய் மலரட்டும் !
மனிதம் போற்றி உயர்ந்திடுவோம்.!

சினமும் தவிர்த்து குணமுடனே!
சிறப்பாய் வாழ்வை அமைத்திடுங்கள்.!
தனமும் நிறைவாய் பெருகிடவே
தளராது ழைத்தே மகிழ்ந்திடுங்கள்.!

கண்ணாய் மணியாய் பணியினையே!
கடமை உணர்வைக் கருத்துடனே!
எண்ணில் எழுத்தில் எழுச்சியுடன்
என்றும் இனிதாய் நெறியுடனே!

பெண்ணின் பெருமைப் போற்றிடவே
பெற்ற தாயாய் காத்திடூவோம்.!
மண்ணின் பெருமை உணர்த்திடவே
மலரும் நாளும் மகிழ்வுடனே.!]

அழைத்தால் மட்டும் பேசிடுங்கள்!
அன்பாய் நாளும் பழகுங்கள். !
உழைத்தால் என்றும் உயர்ந்திடலாம்
உலகம் போற்ற வாழ்ந்திடலாம்.!]

மழைபோல் சமமாய் வாழுங்கள்!
மண்ணின் பெருமைக் காத்திடுங்கள். !
குழைவாய் குறையைச் சொல்லிடுங்கள்.!
குன்றாய் பண்பில் உயர்ந்திடுங்கள்.!


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.