புதியவை

பத்தாவது ஆண்டு கம்பன் விழா சிட்னி மாநகரில் 21 ம் திகதி தொடக்கம் 23 ம் திகதி இன்று வரை நடைபெறுகிறது.



காவியம் தந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு கம்பன் அடிப்பொடி அமரர் கணேசன் அவர்களால் காராக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட கம்பன் கழகம் தமிழ் நாட்டில் பல தமிழறிஞர்களின் முயற்சியினால் வளர்ந்து விருஷமாகிவிட்டது.

அவர்களது அடியொற்றி இலங்கையிலும் கம்பன் கழகம் பல தமிழறிஞர்களின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் இருந்து பல அறிஞர்களை வரவழைத்துக் காலத்துக்காலம் தலைநகர் கொழும்பிலும் , யாழ்ப்பாணத்திலும் , மிகவும் விமரிசையாகக் கம்பன் விழா நடத்தப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் வித்துவான் சொக்கலிங்கம், திரு சிவராமலிங்கம், இவர்களது பயிற்சிப்பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஜெயராஜின் வருகையொடு இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் புதுப்பொலிவு கண்டது.


ஜெயராஜின் தனிப்பட்ட ஆளுமையால் அவர் கம்பவாரிதி என அழைக்கும் அளவுக்கு கம்பன் கழகத்தில் பெருமிடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரால் பயிற்றப்பட்டவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் கம்பன் கழகத்தை ஆரம்பித்து அங்குள்ள தமிழர்களின் ஆதரவைப் பெற்று கம்பன்கழகத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு உழைக்கின்றார்கள்.

அந்தவழியில் பத்தாவது ஆண்டு விழாவாக அவுஸ்திரேலிய நாட்டில் சிட்னி மாநகரில் இம்முறை கம்பன் விழா மிகவும் கோலாகலமாக நடக்கின்றது.

வழக்காடு மன்றம், பட்டிமண்டபம், இளைஞர் கருத்தரங்கம், சிறுவர் ஆரங்கம், கவியரங்கம்,சிந்தனை அரங்கம்,இலக்கிய ஆணைக்குழு,
எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் இம்முறை கம்பன்விழாவை அலங்கரிக்கின்றன.

தமிழ்நாட்டிலிருந்து புலவர் இரா சண்முகவடிவேல், தமிழ்த்துறைப் பேராசிரியர் அசோக்குமார், இலங்கையைச் சேர்ந்த கலாநிதி பிரசாந், வாசுதேவா, கம்பவாரிதி ஜெயராஜ் , ஆகியோருடன் உள்ளூர் பிரமுகர்களும்பங்கு கொள்ளுகிறார்கள்.


சமூகத்துக்குத் தொண்டு செய்தவர்கள், மொழிக்குத் தொண்டு செய்தவர்கள் சமயத்துக்குத் தொண்டு செய்தவர்கள், ஆகியோர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களைக் கம்பன்விழாவில் கெளரவப்படுத்தி கம்பன்கழகம்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. ஆங்கில மொழிபேசும் அன்னிய கலாசாரமிக்க நாட்டில் அன்னைத்தமிழ் மொழியை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்துக்கு ஊட்டும் பணியைக் கம்பன்கழகம் ஆற்றிவருகிறது என்பது முக்கிய அம்சமாகும்


கம்பன் கழக வளர்ச்சியில் இஸ்லாமியப் பெருமகனும் தமிழ் அறிஞரும் நீதி அரசருமான எம் . எம் . இஸ்மாயில் அவர்களது பணியானது மிகவும் உயர்ந்து நிற்கும் பணி என்பதை யாவருமே ஏற்றுக் கொள்கின்றார்கள்.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது பெற்ற தடாகத்தின் ஆலோசகர் சகோதரர் எம் . ஜெயராமசர்மாஅவர்களுக்கு
தடாகம் குடும்பத்தினரின் மன நிறைவான வாழ்த்துக்கள் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அமைப்பாளர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.