புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டுப் பிரிவுஅண்மைக்காலமாக  'தடாகம்' நூல்  வெளியீட்டு பிரிவாக செயற்பட்டு வருவையிட்டு 
பெருமிதமடைகின்றேன்  

தடாகத்தில்  நல்ல தரமான நூல்களை வெளியிட நாம் தயாராக இருக்கின்றோம்  

'தடாகம் கலை இலக்கிய வட்டம்' தனியொரு பெண்ணின் முயற்சியில்ஆரம்பமானது 
 பெண் என்பதால்  நாம் உதவிகளை தேடி பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் நாம் 
பெண்களாக இருந்து பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து  மிகவும் பொறுமையோடு செயற்பட்டு வருகின்றோம் 

இந்த அடிப்படையில் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியிலும் ஒன்பது புத்தகங்களை 
வெளியிட் டது  எமக்கு ஓர் சாதனையாகும் 


பொத்துவில் கவிஞர்அஜ்மல் கானின் அவர்களின் 
=== ''காதல் பித்தனின் கிறுக்கல்'  (வெளியீடுஅல் இர்பான் மகளிர் கல்லூரி.பொத்துவில்)

 இலங்கை வானொலி அறிவிப்பாளர்கவிதாயினி  நாகப்பூசணி கருப்பையாவின் 
  =='நெற்றிக்கண்' புதுக்கவிதைத் தொகுதி  (வெளியீடு கொழும்பு   -சபாயர் ஹோட்டல்) இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ் ஜனூஸ் அவர்களின்
==;தாக்கத்தி' புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி)

குருநாகல் தாரிக்கா மர்சூக் அவர்களின் 

=='ஊசலாடும் நினைவுகள்' கட்டுரைத்தொகுதி (வெளியீடு குருநாகல் நகர மண்டபம்) 

கவிதாயினி  மலேசியா சாந்தகலா

==='கரை சேராத படகு புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு கொழும்பு தொமட்டகொட வை.எம்.எம்.ஏ மண்டபம் )

 கவிஞர்  நுஸ்ரி ரஹ்மத்துல்லாலாஹ் அவர்களின்

== 'கடல் தேடும் நதி 'புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு  கொழும்பு தமிழ் சங்கம்.அறிமுகவிழா  புத்தளம் ஸாஹிராக் கல்லூரி)  கவிஞர்ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின்
==='முகவரி இழந்த முச்சந்தி'  புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடுஓட்டமாவடி பிரதேச சபை மண்டபம் )

ஆகிய நூல்களைசிறப்பான முறையில்  வெளியீடு  செய்து உள்ளோம் 

500 மேற்பட்ட திறமைசாலிகளைஇலங்கை .இந்தியா   .மலேசியா சிங்கப்பூர் உட்பட  (கடல் கடந்து)  இனம் கண்டு விருதுகள்வழங்கி கௌரவித்து வருகின்றோம் 

இலங்கை வானொலி புகழ் பெற்ற அறிவிப்பாளர் மறைந்த ராஜேஸ்வரி சண்முகம் 
புகழ் பெற்ற கல்விமான் மறைந்த எஸ் .எச்  எம் ஜெமீல்  
மறைந்தமுற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியர்
மறைந்த கல்விமான் சு வித்தியானந் தன்  
போனவர்களின் ஞாபகமாகவிருதுகளும் வழங்கி  கௌரவித்துள்ளோம் 

 -தடாகத்தின் பனி மேலும்  விரைவில் தொடரும்

  கவிதாயினி ராஜ் சுகா 

 மன்னார்காக்கையன்குளம்  ஹுசைன் 

 அட்டாளைச்சேனை ரிஸ்லி சமத் 

 புத்தளம் சாலி அஸீம் 

ஆகியோர்களது நூல்கள்  வெளியீட்டுக்காகதடாகத்திடம்  உள்ளது 

இறையருளால் விரைவில் வெளியிடப் படும்  இன்ஷா அல்லாஹ் 

 தற்போது சர்வதேச மட்டத்தில் வாழும் இலக்கியவாதிகளின் இலக்கிய புத்தகங்களையும் வெளியிட 'வவுனியா விஜய் அச்சகம்' தடாகத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது 
வெளியீடுசெய்யும் நூல்களை  தடாகம்வெளியிட்டுப் பிரிவுக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் காரணம் வெளியிட்டுப் பிரிவின் ஊடகம்  தரம் கண்டு அவர் அவர்கள் நூல்களை பரிசினை செய்த பின்பே  வெளியீடு  செய்யப்படும் அதற்காக  பாவலர்கள் நியமிக்கப்பட்டு  உள்ளார்கள்  

சுமார் 31 வருடங்களாக  சேவை செய்து வரும் தடாகம் அமைப்பு விமர்சகர்களின்  குறைகளில் இருந்து விலகி நிறைவு காண வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் 

நூல் வெளியீட்டு விழாவை கவிஞர்கள் தத் தமது  விருப்பப்படி செய்வதாயின் தயவுசெய்து  தடாகத்தின் உதவிகளை நாட  வேண்டாம் அவர்கள் அவர்களது நூல்களை  அவர்களாகவே வெளியிடுவது சிறந்தது 

தடாகம் கலை இலக்கியம் வட்டத்தின்வெளியீட்டுப் பிரிவின்பொறுப்பாளர் ஜெர்மன்  கவிதாயினி லூசியா  கூஞ்ஞெ அவர்களது விருப்பத்தினால் 
(ஆர்யான் டேவிட்வில்லியம்ஸ் அறக்கட்டளை நிதியம் ஊடாக) 
வசதியற்ற கலை உள்ளங்களின் நூல்களை வெளியிட தீர்மானித்து உள்ளோம் 
விரைவில் கை  கொடுத்தும்  உதவுகின்றோம் 

எனவே தடாகம் மூலம்நூல் வெளியிடுவதாயின்   தடாகத்தின் நிபந்தனைகளை பெற்றுக் கொண்ட பின்பு தான் நூல் வெளியிட்டு ஏற்பாடுகளை செய்ய தயாராகவேண்டும் 

எமது தடாகம் வெளியீட்டுப் பிரிவில் இணைந்து  கொள்ள விரும்பும்உறவுகள் இந்த மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளுங்கள் 


நல்ல  பணிகளை செய்வோம் -நல்லாசிகளை பெறுவோம் 

தடாகம் நல்ல தாமரைகளாய் கலைமணம்  வீச (செழித்துப்பூக்க )  அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

'கவினுறு கலைகள்வளர்ப்போம்' 

நன்றி 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் -தடாகம் கலை இலக்கியம் வட்டம் 
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.