புதியவை

ரதி மோகன் - பனி விழும் மலர் வனம்


அத்தியாயம் - 27  

பாடலைக் கேட்டு இரசித்த வண்ணம் அவர்கள் வீடு நோக்கி வர இருட்டி விட்டது. கோடைகால மேகங்களின் குடைவிரிப்பிற்குள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தேசமான டென்மார்க்கினை கார்காலமேகங்கள் சூழ்ந்து அபகரித்துக்கொள்ள காற்றோடு அடிக்கடி மழையும் குளிரும் இணைந்து இருளும் சூழத்தொடங்குகிறது. மெல்லிசை பாடி வந்த தென்றலும், இனியகீதமிசைத்த பறவைகளும்  எங்கே பறந்து சென்றனவோ என ஓர் அங்கலாய்ப்பு எல்லோர் மனங்களிலும் மெல்ல மெல்ல ஊடுறுவ, இலையுதிர்காலமும் தன் முகம் காட்ட, பெருத்த இடியோசையோடு மாமழை பொழிந்தது. சங்கரின் காரை விட்டு இறங்கிய மதுமதி மழையில் நனைந்தபடி "சரி நான்போயிற்று வருகிறேன் " என அவர்களை நோக்கி கையசைத்தபடி தன் காரை நிறுத்திய இடத்தை நோக்கி செல்லவும் . அதைப்பார்த்த சங்கர்""மது மது நில்லு...உன் கையிலை காயம் இப்ப நீ கார் ஓட்ட வேணாம்.. நான் உன்னை வீட்டை இறக்கி விடுறனே..." . மதுமதி " என்ன" என பார்வையாலே கேட்டாள். " இப்ப ஏன் முறைக்கிறாய்.. காலையிலை வந்து உனை வேலைக்கும் கூட்டிப்போறேனே." என்றவுடன் மாமியும் சேர்ந்து ஒத்துப்பாடத்தொடங்கியது உள்ளூர எரிச்சலைத்தந்தாலும் போனவள் அப்படியே கார் அருகில் சிலையாகவே நின்றாள் .. மழை பெய்வதையும் அவள் பொருட்படுத்தவில்லை.. மாமா வீட்டவர்களின்  அன்புக்கட்டளையை தாண்டிச்செல்ல அவளின் மனம் ஏனோ இடங்கொடுக்கவில்லை. பேய்க்காற்றோடு சோ சோவென்று கொட்டிய மழையில் மதுமதி தெப்பமாகவே நனைந்து போனாள்.

இதைப்பார்த்த மாமி " ஐயோ வருத்தம் அல்லோ வரப்போகிறது.,, வா பிள்ளை வேறை உடுப்பை மாற்றிட்டு போகலாம் "என அவளின் கையைப்பற்றி இழுத்தவாறு வீட்டிற்குள் புகுந்தார்.. " இந்தா இந்த உடுப்பை மாற்றிட்டு வாம்மா என அவர் நீட்டிய உடுப்பை வாங்கி அணிந்த அடுத்த நிமிடம் தன் வீடு நோக்கி பயணமானாள். சங்கர் காரை ஓட்டினான். அவள் கண்களை மெல்ல மூடியபடி  " பாவம் அவன்... வை phone ஐ என திட்டி அவன் மனதை நோகடித்து விட்டனே..முதல் அவனிடம் மன்னிப்புக்கேட்கணும்"  மனம் பேசியது.
சங்கர் ஓரக்கண்ணால் அவளை பார்த்தான்" பாவம் களைப்பில் கண்ணை மூடி இருக்கிறாள் அவளை பேசி தொந்தரவு பண்ணக்கூடாது" என மனதோடு பேசியபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தான்.

ஒரு முப்பது நிமிட பயணம்தான். மதுமதியை இறக்கிவிட்டு சங்கர்போய்விட்டான். அனசனோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. பலதடவை முயற்சித்தாள். அவன் தொலைபேசி எடுக்கவில்லை. அனசன் ஒருபோதும் இப்படி இருந்தது இல்லை.
அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. கோபத்தில் கைத்தொலைபேசியை கட்டிலில் தூக்கி வீசினாள். போர்வைக்குள் புகுந்தவள் தூங்கியே போனாள்.

பூமாதேவியும் தன்னை இரவுப்போர்வைக்குள்  புகுத்திக்கொண்டாள். மழை பெய்யும் ஓசையைத் தவிர எங்கும்  ஒரே நிதப்சம் நிலவியது.  டாங் டாங் சுவர்க்கடிகாரம் இருதடவை அடித்து ஓய்ந்தது. சாமத்தைத்தாண்டி இரவு 2.00 மணியாகியது.

அப்போதுதான் மதுமதியின் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது.. நித்திரையில் அவளுக்கு கேட்கவில்லை...நீண்டநேரத்தின் பின் ஏதோ கனவு கண்டவளாய் துடித்து பதை பதைத்து எழுந்தவள் தொலைபேசியை எடுத்தாள் எதிர் முனையில் "" மது மது .."அவனின் ஈனக்குரல் அழுகையினூடு தெளிவின்றி.... " எங்கேடா நிற்கிறாய் பேசடா நான்  மதுடா.. என்ன நடந்துச்சு... சொல்லுடா...." அப்படியே தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மீண்டும் அவள் அவனுக்கு ஹோல் எடுத்தாள் .. எடுக்க முடியவில்லை. அவன் லைனிலேயே இருக்கிறான் ... ஆனால் அவனால் பேச முடியவில்லை என்பது மட்டும் அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு இதயம் படபடக்க தொடங்கியது. கைகால்கள் குளிர்ந்து ஏதோ அவளுக்குள் ஓர் அபாய ஒலி கேட்டது. "ஐயோ அவனுக்கு ஏதும் ஆக கூடாது... இறைவா உனை இதுவரை எதுவுமே கேட்டதில்லை எனக்காய்..அவனை காப்பாற்று" ஓவெனகுளறி அழுதாள். கண்கள் மெல்ல மெல்ல இருள தொடங்க கட்டிலில் வீழ்ந்தாள்.. எழுந்தாள். ஓடினாள்.. சுவரோடு தலையை மோதினாள் .. மயங்கினாள். ..எழுந்தாள். மீண்டும் தொலைபேசியை காதில் வைத்தாள்.. எதிர் முனையில் நிசப்தம்...

அனசனின் தாயாருடன் தொடர்பு கொண்டபோதுதான் விபரம் தெரிந்தது.. அனசன் விபத்தில் சிக்கி பத்து நிமிடத்திற்கு முன்புதான் ஹெலிக்கொப்டர் மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுவதாகவும் அறிந்தகணம் சங்கருக்கு தொலைபேசி எடுத்தாள் " சங்கர் இப்ப வா பிளீஸ் ..." என அழுதாளே தவிர விபரம் சொல்லவில்லை. " சொல்லுடி என்ன ஆச்சு கனவு கண்டியா" இது சங்கரின் கேள்வி. " வா என்றால் வாடா என்னுயிர் போக முன்.." மதுமதி ஓவென அழுதாள்..😭😭


(தொடரும் )

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.