புதியவை

பேதமில்லாப் பெருமகளே - எம் .ஜெயராமசர்மா

        
      

   
 கிடைக்கின்ற நேரமெலாம் தமிழுக்கே கொடுத்துநிற்கும்
 படைப்பாற்றல் மிக்கவுள்ள பண்புநிறை கலைமகளே 
 துடிப்புடனே செயலாற்றி தூய்மைநிறை ஆண்டவனின் 
 தனிக்கருணை பெற்றதனால் தமிழ்வளர நினைத்தனையோ !

 தடாகமெனும் மகுடமதை தனியாகத் தேர்ந்தெடுத்து
 தமிழறிந்த தாமரைகள் பலமலர வழிவகுத்தாய் 
 தித்திக்கும் தமிழ்வளரத் திங்கள்தோறும் தேர்வுவைத்து
 எத்திக்கும் மெச்சுதற்கு எழில்பட்டம் வழங்குகின்றாய் !

 அரச சபையேறி அவைசிறக்க பாடுவார்க்கு 
 அரச பரிசாக அவைமகிழ்ந்து கொடுத்துநிற்கும் 
 அரச சபையாக தடாகமது அமைந்தின்று
 அன்னைத் தமிழ்ப்பரிசை அகமகிழ்ந்து கொடுக்கிறதே  !

 தடாகத்தின் பரிசுபெற்றார் தகைமைநிறை உடையவராய் 
 தமிழுலகில் பவனிவரத் தமிழன்னை மகிழ்ந்திடுவாள் 
 அமுதான மொழிபற்றி ஆழமுடன் சிந்தித்து
 அப்பணியை நிறைவேற்றும் அருமைரிஸ்வி வாழியவே !

   எழுதுகின்றார் மனம்மகிழ எழுச்சியுடன் பணியாற்றும்
   எமதருமைக் கலைமகளை எல்லோரும் வாழ்த்திடுவார்
   சாதிமதம் பாராமல் தமிழ்மொழியைப் பார்த்துநிற்கும்
   பேதாமில்லாப் பெருமகளே பெருமையுற வாழ்த்துகிறேன் !


                No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.