புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் இம் மாதத்தின் சிறப்புக் கவிஞராக தெரிவு செய்யப்பட்டு .கவினெழி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்---சோமு. சக்தி, சென்னை

போட்டி இலக்கம் -83(வது மாதம்)

தலைப்பு -முற்றுப் புள்ளி பதிவு இலக்கம் 24

கவிஞருக்கு  தடாகத்தின் வாழ்த்துக்கள் 

(ஓரொலி வெண்டுறை)

ஊருக்கூர் சென்றாயே உலகையும் பார்த்தாயே ஊர்ந்தே
உருகிவரும் அன்புதனை உணர்ந்தாயே உள்ளத்தில் உய்த்தே
பாருக்குள் மனிதர்களைப் பைத்தியமாய் ஆக்கிடுதே பாழாம்
போருக்கே நீமுற்றுப் புள்ளியைத்தான் வையே !
வேருக்கு நீரூற்றி விளைத்திட்ட செல்வத்தை வேண்டியே
வெருட்டிக் கொள்ளையிடும் வீணர்களை வீழ்த்துதற்கு வாராய்
திருடரே நாடுகளைத் தீயிட்டுக் கொளுத்துவதைத் தேராய்
போருக்கே நீமுற்றுப் புள்ளியைத்தான் வையே. !
யாருக்கும் தெரியாமல் அகதிகளாய்த் தப்பியுமே அழிவார்
சேருமிடம் அறியாமல் சிக்கித்தான் தவிக்கின்றார் தெளிவாய்
கோருகின்ற புகலிடமும் கொடாரே கொடியோர்தான் கூர்வாய்
போருக்கே நீமுற்றுப் புள்ளியைத்தான் வையே !
இருட்டறையில் நின்றுகொண்டு இதுயானை என்பதனை ஏலாய்
மருட்டுகின்ற வெடிகுண்டால் மயானமாவதா நம்பூமி மாறாய்ச்
சுருட்டுகின்ற வீணர்களின் சொல்வெறியிற் சிக்காதே சோராய்
போருக்கே நீமுற்றுப் புள்ளியைத்தான் வையே !
ஆருக்கு வேண்டுமிந்த அணுகுண்டும் ஆயுதமும் அழிவாய்
ஊருக்கூர் போய்ப்பார்த்தால் உணவுக்கே வழியில்லை அறிவாய்
உருப்படியாய்க் கல்வியுடன் உறைவிடமும் அளியாரே ஓர்வாய்
போருக்கே நீமுற்றுப் புள்ளியைத்தான் வையே. !
சிரியாவும் லிபியாவும் ஈராக்குடன் ஆப்கானும் தீயாய்
கிரிமியா தென்சீனக் கடல்வரையில் போர்ப்பயிற்சி கேளாய்
விரிசலுறும் இந்தியாபாக் வீண்கர்வத் தூண்டல்களும் வேராய்
வரியலாமே உலகப்போர் வைமுற்றுப் புள்ளியே !
(பொருள்: கூர்வாய் – கூர்த்த அறிவு கொள்வாய், சினப்பாய், ஓர்வாய் –ஆராய்ந்தறிவாய்)
---சோமு. சக்தி, சென்னை

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.