புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம்பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--சா.சையத் முகமது,-தமிழ் நாடுதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு   2016  நடத்திய உலகம் தழுவிய   மாபெரும்கவிதைப் போட்டியில்            
அக்டோபர் மாதத்தின்  இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்பட்டகவிதைக்கு    "கவித்தீபம்பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்--சா.சையத் முகமது,-தமிழ் நாடு

இறைவனவன் வளங்கிடுவான் தொடர் புள்ளி
இதைமனிதன் மறந்தாலோ முற்றுப் புள்ளி
மறையளித்தான் மாநிலத்தில் சிறப்பேயுறவே...
குறைகளிலே மிதக்கினறான் மனித னிவனே..
.
அன்பினாலே அரவணைத்தல் இன்பப் புள்ளி..
எனதென்றே எல்லாமே கசப்பாய்ப் புள்ளி...
ஆன்றோரின் வழிநடத்தல் ஆரம்பப் புள்ளி
ஆனமட்டும் உழைப்பதனால் நீண்டப் புள்ளி..
.
இன்முகமே இணைத்திடுமே காலப் புள்ளி. ..
இனியேனும் நட்பாக்கத் தொடரிப் புள்ளி
வன்முறைகள் வேண்டாமே;முற்றுப் புள்ளி
வான்புகழாய் வல்லோனின் முடிவிலாப் புள்ளி.
..
கல்வி கல் அமைந்திடுமே வாழ்க்கை ப் புள்ளி. .
கல்கண்டாய் சுவைதருமே வாழ்த்தும் புள்ளி. ...
கல்புக்குள் மறையதனை நிறைக்கும் புள்ளி. ..
கலகலப்பாய் பயணமாக்கும் வெல்லும் புள்ளி....

அல்லும் பகல் முயற்சியதே முனைப்பு புள்ளி. ..
ஆலமரத்தின் விழுதாகும்காக்கும் புள்ளி...
எல்லோருக்கும் நல்லோனாய் நடக்கும் புள்ளி. .
வில்லம்பாய் முடித்திடுமே முற்றுப் புள்ளி. ...

கால்களது காலன்வந்தால்நடக்கா புள்ளி..
காலமது கடத்தாமல் செயலில் புள்ளி. ...
கொல்லர்கள் செயததனால் கருவிப் புள்ளி...
கொள்கையுடன் பயன்படுத்தின் வெற்றிப் புள்ளி.
சா.சையத் முகமது,-தமிழ் நாடு

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.