புதியவை

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியினால் சாய்ந்தாமருதில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்


சாய்ந்தாமருதில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாகிஸ்தான் இளைஞர் கவுன்சிலின் அனுசரணையுடன்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியால் (NDPHR) கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தில் இன்று 2016-11-09 ஆம் திகதி அதிபர் எம்.ஐ.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது. தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபாகத்தலைவர் முஹைதீன் பவா பாகிஸ்தான் இளைஞர் கவுன்சிலுடன் உரையாடியதன் பயனாக குறித்த உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இங்கு உரையாற்றிய றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சம்சுடீன், கற்றலை முன்கொண்டு செல்ல அவசியமாக இருக்கும் கற்றல் உபகரணங்களை இவ்வாறான மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வானது, இம்மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகுந்த உதவியாக இருக்குமென்றும் இவ்வாறான உதவிகளைப் பெற்றுக்கொடுத்த கனவான் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபாகத்தலைவர் முஹைதீன் பவாவுக்கு இம்மாணவர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டுமென்றும், கல்வி வளர்ச்சிக்கு ஆற்றப்படும் இவ்வாறான பணிகள் மாணவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்குரியதென்றும் தெரிவித்தார். அடுத்தாண்டில் மாணவர்கள் பயன்பெறக்கூடிய குறித்த பொதிகள் வழங்கும் நிகழ்வில் முஹைதீன் பாவா சார்பில் ஊடகவியலாளர் எம்.வை.அமீர் பங்கு கொண்டதுடன், முஹைதீன் பாவாவின் செய்தியும் அங்கு வாசிக்கப்பட்டது. இதில் நாட்டினதோ அல்லது பிரதேசத்தினதோ வளர்ச்சி என்பது எத்தனை வீதம் கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளதென்பதைக்கொண்டே நிர்ணயிக்கப்படுவதாகவும், பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய கற்றல் விடயங்களில் மாணவர்கள் முழு மூச்சுடன் செயற்பட வேண்டுமென்றும், கல்லெறிவது என்றாலும், பறவைகளை நோக்கியில்லாது விமானங்களை நோக்கியதாக தூர நோக்குடையதாக இருக்க வேண்டுமென்றும், எதிர்காலத்தில் இவ்வாறான பல உதவித்திட்டங்களைச் செய்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நிகழ்வில் பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள், பெறோர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.