புதியவை

அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் ! ( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )

                                ( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )


அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் !( எம் . ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )  
      
ஈழத்து வரலாற்றில் இந்திமொழி செலும்வாய்ப்பை
இறையருளால் பெற்றவெங்கள் இனியதமிழ் கலைமகளே 
ஆழமாய் கவிபுனையும் ஆற்றலுனைச்  சேர்ந்ததனால்
அறிஞருனை அணைத்துநின்று அளித்துவிட்டார் iபெருமைதனை !            

கிழக்கிலங்கை பூத்தமலர் வடநாட்டில் மணம்பரப்ப
அனைத்துளமும் அதைப்பார்த்து அகமகிழ்ந்து நின்றிடுமே
முழக்கமிடும் ஆணினத்தின்  முன்வந்து நின்றெழுந்து 
 தளப்பமில்லா பணியாற்றும் தலைமகளே வாழ்த்துகிறேன் !
கலைமகளைப் பெயராக்கிக் களைப்பின்றி பணியாற்றி
நிலையாக நிமிர்ந்துநிற்கும் நிலைகண்டு வாழ்த்துகிறேன் 
தலையாய பரிசைநீ தமிழினுக்கு அளித்துவிட்டாய்
தமிழ்மகளே கலைமகளே வாழ்ந்திடுக பல்லாண்டு !

தமிழ்க்கவிதை மடியினிலே தவழ்ந்து விளையாடிநிற்கும்
 தமிழமுதே ரிஸ்விநீ தலைநிமிர்ந்தே நின்றிடம்மா 
அமுதான தமிழுனக்கு அருமருந்தாய் இருக்குதம்மா
ஆதாலினால் தமிழ்கொண்டு அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.