புதியவை

இதயத்தால் வாழ்த்துகிறேன் ! ( எம் . ஜெயராமசர்மா .மெல்பேண் அவுஸ்திரேலியா )


               சாதனையின் நாயகியே சரித்திரமாய் மாறுகிறாய் 
              சோதனைகள் தனையெதுர்த்து துணிச்சலுடன் இயங்குகிறாய்
              தாமரைகள் பலமலர தளர்வில்லா உழைக்கின்றாய்
              பூதலத்தில் கலைமகளே பொலிவுபெற வாழ்த்துகிறேன் !


              பெண்ணினத்தின் கண்ணாகப் பெரும்பணிகள் ஆற்றுகிறாய்
              உன்துணிச்சல் வந்துவிட்டால் உயர்ந்திடுவார் பெண்களெலாம்
              என்குடும்பம் என்வீடு எனவெண்ணி இருக்காமல்
              எந்தமிழைத் தினமெண்ணி இருக்கும்ரிஸ்வி நீவாழ்க !


              படைத்தளிக்கும் பலபேரை பாரிலுள்ளோர் அறிவதற்கு
              துடிப்புடனே செயலாற்றும் துணிவுகண்டு வாழ்த்துகிறேன் 
              எடுத்திருக்கும் இம்முயற்சி இமயமாய் உயர்கவென்று 
              இறைவனை வேண்டிநிதம் இதயத்தால் வாழ்த்துகிறேன் !


              கன்னித்தமிழ் வளர்ப்பதற்கு கடவுள்தந்த கலைமகளே 
              உன்னரிய சேவையினால் உச்சிதொட்டு நிற்கின்றாய் 
              இன்னும்பல பணிஆற்ற இறையுனக்கு அருள்தருவார் 
              கன்னல்தமிழ் கலைமகளே கவிகொண்டு வாழ்த்துகிறேன் !
             
    
வாழ்த்துக் கவி - எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.