புதியவை

சத்திரசிகிச்சையின் சரித்திரம் டாக்டர் நிமலரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்: சாதனைபடைத்த கல்முனைஆதாரவைத்தியசாலைக்கு பாராட்டுக்கள்! த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் புகழாரம்!ஊடகவியலாளர் (காரைதீவு சகா)இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகளில் இவ்வாண்டின் முதல்காலாண்டில் நடாத்தப்பட்ட பாரிய சத்திரசிகிச்சைகள் தரவரிசையின்படி கல்முனை ஆதார வைத்தியசாலை இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளமையை அறிந்து வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் புகழாரம் சூட்டினார்.


இலங்கையிலுள்ள பெரிய வைத்தியசாலைகளில் நடாத்தப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பாரிய சத்திரசிகிச்சைகளை மட்டும் மையமாகவைத்து சுகாதார அமைச்சு நடாத்திய இவ் ஆய்வில் 10வீதத்திற்கு மேல் பெற்ற 42 வைத்தியசாலைகள் இடம்பிடித்துள்ளன.
57.38வீதத்தைப் பெற்று முதலிடத்தை பேராதனை போதனா வைத்தியசாலை சுவீகரித்துள்ளது.54.79வீதத்தைப் பெற்று கல்முனை ஆதாரவைத்தியசாலை இரண்டாமிடத்தைச் சுவீகரித்துள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் வாழ்த்துகையில்:
இந்தச் சாதனைக்கு ஆணிவேராகத் திகழ்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர்தங்கராஜா நிமலரஞ்சன் பாராட்டுக்குரியவர். தன்னலம்கருதாது வைத்தியசேவை ஒன்றே தனது இலட்சியம் என்று கருதி செயற்பட்டவர்.அவருக்கு உதவியாக மயக்கமருந்தூட்டும் நிபுணர் டாக்டர் வி.தேவகுமாரும் பாராட்டுக்குரியவர்.அவரது குழாத்தினரையும் பாராட்டுகின்றேன்.

100ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த பழைய சத்திரசிகிச்சைக்கூடத்தில் பல வசதியீனங்களுக்கு மத்தியில் இத்தகைய பாரிய சத்திரசிகிச்சைகளை செய்து சரித்திரம் படைப்பதென்பது சாமானியமானதொன்றல்ல. எனவே வைத்தியசாலை சமுகத்தினரை மீண்டும் பாராட்டுகின்றேன்
அதேவேளை இளம் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர். இராசரெத்தினம் முரளீஸ்வரன் இங்கு காலடிஎடுத்துவைத்த கணம் தொடக்கம் அவரது அர்ப்பணிப்பான சேவைக்கு வெகுமதிகள் தொடராக கிடைத்துவருகின்றன.
கடந்தாண்டுக்குரிய தேசிய உற்பத்தித்திறன்விருது அம்பாறை மாவட்டத்தில் இவ்வைத்தியசாலைக்கு மட்டுமே கிடைத்திருந்தமையை இவ்வண் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.அதற்கும் அத்தியட்சகர் உள்ளிட்ட குழாத்தினரைப்பாராட்டுகின்றேன்என்றார்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.