புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் நவம்பர் மாதத்தின் முதலவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவியருவி பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்-சாமி சுரேஷ்தமிழ்நாடு,இந்தியாஉலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம் 15
தலைப்பு -கவிதைப்போட்டி -தொலை(தொல்லை ) பேசி 
எத்தனையோ எண்களை என்மனதில் வைத்திருந்தேன்
அத்தனையு மின்றே அறிகிலேன்-பித்தனாய்
மாற்றி யெனைபின் தொடரவேச் செய்கிறதே
கூற்றென்றே கூறுவேன் நான்.

அரும்பா மலரென ஆழ்தமிழ்சொல் லெடுத்து
கரும்பா வெழுதி களித்த-தருணங்கள்
கொன்றேப் போட்ட தொலைப்பேசி புள்ளினம்
கொன்றிடு மிந்தஅலைப் பேசி.

பள்ளி பயிலும் பருவத்தார் பையிலும்
சுள்ளி எடுப்பார் சுருக்கிலும்-குள்ளநரி
போலொளிந்தே மெல்ல பெயர்த்திடும் ஆற்றலை;பொன்
காலத்தை தின்னுங் களிறு.

நல்லவை ஆயிரம் நாமறிய செய்தாலும்
அல்லவை செய்தல் அதிகந்தான்-தொ(ல்)லைப்பேசி
இல்லையென் றாலு மிருகை உடைந்தார்போல்
கொல்லுதே பாவி மனம்.

யாரிடத்து மண்டாது எப்போதும் கண்பதித்தே
போரிடத்தில் தோன்றும் புழுதிபோன்று-ஓரிடத்தில்
உட்கார்ந்தே மெல்லு முலக நிகழ்வை;நம்
முட்பகை ஆக்குங் கருவி.
-சாமி சுரேஷ்த -மிழ்நாடு,இந்தியா

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.