புதியவை

உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி டிசம்பர் 2016



இது ஊக்கமென்னும் உரம் போட்டு அவரவர் திறமைகளை வளர்க்கும் போட்டி
.............................................................................................................
இங்கு யாருக்கும் தனிப்பட்ட சிபாரிசுகள் கிடையாது 
ஒவ்வொருவரின் திறமைக்கு மட்டுமே இடமுண்டு 
..................................................................................................
போட்டித் தொடர் -85 வது மாதம் 

கவிதை போட்டியின்  தலைப்பு -உன்னுள் நீ 


போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.

போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்.

கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்அத்தோடு உறுதிப் படுத்தல் வேண்டும்


அத்தோடு சிலர் பெண் பெயர்களில் எழுதாமல் அவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் எழுவது சிறந்தது பெண்களின் பெயரில் ஆண்கள் மாறு வேடம் போடுவதை தடுத்துக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகின்றோம்  அப்படிப்பட்டவர்களின் கவிதைகளை நாம் போட்டியில் எக் காரணம் கொண்டும் இணைத்துக்கொள்ளமாட்டோம்

புதிதாக எழுதும் போட்டியாளர்கள்உங்கள் சொந்தக்  கவிதைகளை சுயமாக எழுதிஅனுப்பி வைக்கவும்  வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இன்னும் ஒருவரின் கவிதைகளை தனது பெயரில் அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் 

வளரும் கவிஞர்களது நன்மை கருதியே நாம் திறமையான வெற்றி பெற்ற கவிஞர்களின்   கவிதைகளைதொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்
தொடர்ந்து எழுதி வரும் அன்பான இதயங்களுக்கு நன்றிகளை தடாகம் தெரிவிப்பதில் மகிழ்சசி அடைகின்றது 
 உங்களது   நேசம் தான் தடாகத்தின் வளர்ச்சிற்கு உரமாகவும்   இருக்கின்றது 
போட்டி விதிகள்…

எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது
ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

கவிதைகள் அனுப்பும் போது தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே இருந்து போட்டிக்கவிதைகள் அனுப்ப வேண்டும்
இன்னுமொருவர் முகவரியில் இருந்து அனுப்புவதையும்..முக நூல் இன் பொக்ஸ்க்கு,அனுப்புவதை தவிர்த்துக்
கொள்ள வேண்டும் 
..........................................................................................................................
கவிதைகளை நேரடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமேஅனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம் 

............................................................................

போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்
,
புனைப் பெயர்,
முழுவிலாசம்,
கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள
தமது சொந்த புகைப் படம்
தன்னைப்பற்றிய  விரிவான குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்


அத்தோடு கவிதைகளை கூகுளில் (google)டைப்பண்ணி அனுப்பி வைக்கவும் 

பொது தளத்திற்கு போடிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளவும் 
...........................................................................................................
தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"

இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்

மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்

மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும்கொடுக்கப்படவுள்ளது

எங்களது பணி! அற்புதமான பணி! அரிய பணி !!

இங்கு போட்டியில் பங்கு பற்றும் கவியுள்ளங்களை என் கலைத்தாயின் பிள்ளைகளாகவே மதிக்கின்றோம் 

அதனால் யாரையும் ,எக் காரணம் கொண்டும் நாம் பிரித்துப் பார்க்கமாட்டோம்

அவர்களது வளர்ச்சிக்குப் பின்னும் ,முன்னும் துணையாய் இருக்கின்றோம்

சிந்தணைத் துளிகள் கொட்டும் போது கவிதை பிறக்கிறது.

அது தடாகத்தின் வரம் என்று மகிழ்ச்சி பெறுவோம்

பொது தளத்தில் போட்டியாளர்கள் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்
 ,
போட்டியில் வெற்றி பெற்றவர்களும் இங்கு கவிதைகளை அனுப்புவதன் மூலம் மன மகிழ்வு பெறுகின்றார்கள் 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்

"கவியருவி பட்டம்'
"கவித்தீபம் பட்டம்'
 "கவின்கலை" பட்டம்'
"கவினெழி " பட்டம்' 
இந்த நான்கு சான்றிதழ்களையும் கவிதை போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெறுவோருக்கு இலங்கையில் நடைபெறும் விழாவில் கௌரவிக்கவும் ஏற்பாடு செய்கின்றோம் 
இது விபரம் பின்பு அறியத்தருவோம் 
தேவையற்ற விடயங்களையும் .விவாதங்களையும் நாம்தவிர்த்துக் கொள்கின்றோம்

'தடாகத்தில் தாமரைகள்' இன்னும் இன்னுமாய் பூத்துக் கொண்டே இருப்பது கண்டு நாம் மன மகிழ்ச்சியோடு
அடைகின்றோம்

இப்போட்டியில் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது

தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை 

 டிசம்பர் மாதம்  31ம் திகதிக்குள் (31-12-2016)கவிதைள் எமக்கு வந்து சேர வேண்டும்)

போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

ஒவ்வொரு மாதமும் தொடரும் கவிதை போட்டிக்கு கடைசி நிமிடத்தில் கவிதைகளை அனுப்பி விட்டு 
எனது கவிதைகளையும் போட்டியில் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்வதை தவித்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம் 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்
இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

'தடாகம் யாரையும் பின் பற்றி என்றும் தொடராது' 

கவினுறு கலைகள் வளர்ப்போம்

நன்றி
ஜெர்மன் லூசியா கூஞ்ஞெ  துணை அமைப்பாளர் 

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.