புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும்சான்றிதழும் , பெறுகின்றார்- வே.சிவசெல்வன்உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டி நவம்பர் மாதம் 2016
போட்டி இலக்கம் மாதம் -84 வது
போட்டிக் கவிதை இலக்கம் 28
தலைப்பு -கவிதைப்போட்டி -தொலை(தொல்லை ) பேசி-
விண்ணைத் தாண்டி கடந்து போனது
விலைவாசி – இருந்தும்
விலைபேசி வாங்கி வந்தேன்
தொலைபேசி!
கண்ணைக் கட்டி காட்டில் விட்ட
கதை பேசி – பகலிரவு
என்னை விட்டுக் கடந்தது
வலை வீசி!
எல்லைகள் தாண்டி வேர் விட்ட
தொலைபேசி – தரும்
தொல்லைகளால் தான் ஆனதோ
தொல்லைப் பேசி!
வழித்துணை போல் உடன் வரும்
தொலைபேசி – தனில் உன்
விழித்திரை பார்வை கெடும்
அதை யோசி!
சட்டைப்பை தொலைபேசி உமிழும்
கதிர்வீச்சு – அது
மெதுமெதுவாய் நிறுத்தி விடும்
உன் உயிர்மூச்சு!
தொலைபேசி அதை உபயோகி
அளவோடு – என்றும்
வாழ்க்கை அது தளிர்விடும்
அழகோடு!
- வே.சிவசெல்வன்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.